Kukkoo Kukkoo |
---|
தந்தன தந்தன தந்தன தந்தன தானா தந்தன தந்தன தந்தன தந்தன தானா
குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குயிலே இனிமை ராகம் இங்கே இளமை தாகம் இங்கே இனிமை ராகம் இங்கே இளமை தாகம் இங்கே நீயும்தான் காதலி காதலை ஆதரி ஓஒஓஹோ ஓஓஒஹோ ஓஓஹோ
குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குயிலே இனிமை ராகம் இங்கே இளமை தாகம் இங்கே
ஆடிக் காத்தடிக்க ஜோடிப் பூக்களங்கே பேசும் கதைப் பேசும் அந்தக் காட்சிதனை பார்த்த தென்றலும்தான் வீசும் பார்வை வீசும்
தனக்கொரு ஜோடிதான் இல்லையென்று தென்றல் தான் நதி அருகே ஓடுதம்மா அதைத் தழுவி ஆடுதம்மா எங்கும் எங்கும் காதல் பொங்கும் பொங்கும் பாடல்
குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குயிலே இனிமை ராகம் இங்கே இளமை தாகம் இங்கே
தோகை தோள்களிலே தொட்டில் ஒன்றை கண்ட காளை இளம் காளை வஞ்சி விரலெடுத்து நெஞ்சில் எழுத சொல்லும் வேளை இன்ப வேளை
பொழுதும்தான் போகுது அது இங்கே தெரியுது மணிக் கணக்கில் பேசி இருந்தும் மனக் கனவு தீரலையே எங்கும் எங்கும் காதல் பொங்கும் பொங்கும் பாடல்
குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குயிலே இனிமை ராகம் இங்கே இளமை தாகம் இங்கே நீயும்தான் காதலி காதலை ஆதரி ஓஒஓஹோ ஓஓஒஹோ ஓஓஹோ