Nalaiku Nam Kaalam Vellum

Nalaiku Nam Kaalam Vellum Song Lyrics In English

ஹே ஹே நாளைக்கு நம் காலம் வெல்லும் வென்றால் காலங்கள் நம் பேரை சொல்லும் கையோடு கைகளை சேர்த்து விடு மெய்யென்ன பொய்ய என்ன பார்த்து விடு நாளை இவ்வுலகம் எனக்கு கொஞ்சம் எனக்கு கொஞ்சம் வாழ்வில் தோல்வி இல்லை என்றும்

ஹே ஹே நாளைக்கு நம் காலம் வெல்லும் வென்றால் காலங்கள் நம் பேரை சொல்லும்

ஊரென்ன சொன்னாலென்ன நம் உள்ளம் தான் வழிக்காட்டும் விளக்கு மேகங்கள் மூண்டால் என்ன அடி விடியாமல் போகாது கிழக்கு காத்திருக்க நேரமில்லை காலங்கள் எப்போதும் கையில் இல்லை பூப்பறிக்க நேரமில்லை போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை

கல்லூரி என்னும் சொர்க்கத்தில் வந்தோம் கண்ணீரே இங்கு இல்லை அதிகாரம் தான் எங்கள் தொல்லை அந்த ஆகாயம்தான் எங்கள் எல்லை

ஹே ஹே நாளைக்கு நம் காலம் வெல்லும் வென்றால் காலங்கள் நம் பேரை சொல்லும்

கல்லூரி எல்லைக்குள்ளே சில சட்டங்கள் திட்டங்கள் இருக்கு யாரோடும் குற்றமில்லை இது கடமைக்கும் உரிமைக்கும் வழக்கு நீந்துங்கின்ற கெண்டைகளே நீரோடு குதித்தாட பாவமில்லை நீரை விட்டு கரை குதித்தால் நீச்சல் தான் தெரிந்தாலும் லாபமில்லை நான் சொல்லும் வாதம் நடைபாதை வேதம் கேளுங்கள் துன்பம் இல்லை

எப்போதும் இதுதானே பாட்டு இப்போது காதுக்கும்தான் வேண்டும் பூட்டு