Ondralla Rendalla Thambi

Ondralla Rendalla Thambi Song Lyrics In English


ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி சொல்ல ஒப்புவமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில் ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி

தென்றல் தரும் இனிய தேன் மணமும் தவழும் தென்றல் தரும் இனிய தேன் மணமும் தவழும் செங்கனியும் பொன்கதிரும் தந்துதவும் நஞ்சைவளம் ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி சொல்ல ஒப்புவமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில் ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி

பகை வென்ற திறம்பாடும் பரணி வகை பகை வென்ற திறம்பாடும் பரணி வகை செழும் பரிபாடல் கலம்பங்கள் எட்டுத்தொகை வான் புகழ் கொண்ட குறளோடு அகம் புறமும் வான் புகழ் கொண்ட குறளோடு அகம் புறமும் செம்பொருள் தந்த தமிழ்ச் சங்க இலக்கிய பெரும் செல்வம் ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி சொல்ல ஒப்புவமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில் ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி


முல்லைக்குத் தேர் கொடுத்தான் வேள்பாரி முல்லைக்குத் தேர் கொடுத்தான் வேள்பாரி வான் முகிலினும் புகழ் படைத்த உபகாரி முல்லைக்குத் தேர் கொடுத்தான் வேள்பாரி வான் முகிலினும் புகழ் படைத்த உபகாரி சொல்லுக்குத் தலை கொடுத்தான் அருள் மீறி கவிச் சொல்லுக்குத் தலை கொடுத்தான் அருள் மீறி இந்த வள்ளலாம் குமணன் போல் வாழ்ந்தவர் வரலாறு ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி சொல்ல ஒப்புவமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில் ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி

இமயத்தை வெற்றி கொண்டான் ஒரு சோழன் இமயத்தை வெற்றி கொண்டான் ஒரு சோழன் அதில் ஏற்றினான் புலி கொடியை எழில் சோழன் ஆஅஆஅ இமயத்தை வெற்றி கொண்டான் ஒரு சோழன் அதில் ஏற்றினான் புலி கொடியை எழில் சோழன் தமிழ் அன்னை கொலுவிருக்க தரணி எல்லாம் தமிழ் அன்னை கொலுவிருக்க தரணி எல்லாம் அவள் தாழ் பணிய வாழெடுதான் நெடு மாறன் ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி சொல்ல ஒப்புவமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில் ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி