நான் இப்போதும் எப்போதும் பாடல் வரிகள்

Starring Vignesh, Padmashri
Movie Chinna Thayee
Music ByIlaiyaraaja
Lyric By Vaali
SingersS. P. Balasubramanyam, S. Janaki
Year 1992

Naan Ipothum Lyric In English

நான் இப்போதும் எப்போதும்
உன்னுடன் இருக்க வேணும்
அட முப்போதும் தப்பாம
மந்திரம் படிக்க வேணும்

அடை மழைக்கு ஒதுங்கும்
மைனா குருவி மயங்கி
கிடக்கும் மெய்தான் தழுவி
இப்போதும் அட எப்போதும்

நான் இப்போதும் எப்போதும்
உன்னுடன் இருக்க வேணும்
அட முப்போதும் தப்பாம
மந்திரம் படிக்க வேணும்

தண்ணீரில் வாழும்
செம்மீன தூக்கி கண்ணீரில்
நான் போட மாட்டேனே

அடி கஸ்தூரி
மானே கண்ணாலே
நானே கல்யாண
பூமாலை போட்டேனே

உன் பேரை சொல்லி
ஓயாது உள் மூச்சு வாங்கும்
பூமாது கை விட்டு போனால்
தாளாது மண் விட்டு போகும் வாழாது

அடி ஆத்தாடி
உன் மேல நான் வெச்ச
பாசம்

ஆகாயம் போல்
இங்கே சாகாமல் வாழும்
நீ தான் நான் என்று
நான்தான் நீ என்று ஜீவன்
ஒன்று தேகம் ரெண்டு

நான் இப்போதும் அடி எப்போதும்
நான் இப்போதும் எப்போதும்
உன்னுடன் இருக்க வேணும்
அட முப்போதும் தப்பாம
மந்திரம் படிக்க வேணும்

வைகாசி மாசம்
கை வீசி வந்த சங்கீத
பூங்காத்து நீதானா

உன் சங்கீதம்
கேட்டு சதிராட்டம்
போடும் சிங்கார
பூந்தோப்பு நான்தானா


உன் தேகம் எங்கும்
பூ வாசம் கண்டாலே தீரும்
ஆயாசம் ஒன்றல்ல நூறு
மாமங்கம் ஆனாலும்
வாழும் நம் நேசம்

என் வாய் பேசும் பேச்செல்லாம்
உன் பேச்சி தானே
உள் வாங்கும் மூச்செல்லாம்
உன் மூச்சு தானே

ஆடும் பூந்தேரே
ஓடும் பாலாறே என்னை
சேரு ஏக்கம் தீரு

நான் இப்போதும் அடி எப்போதும்
நான் இப்போதும் எப்போதும்
உன்னுடன் இருக்க வேணும்
அட முப்போதும் தப்பாம
மந்திரம் படிக்க வேணும்

அடை மழைக்கு ஒதுங்கும்
மைனா குருவி மயங்கி கிடக்கும்
மெய்தான் தழுவி இப்போதும்
ஹோய் எப்போதும்

நான் இப்போதும் எப்போதும்
உன்னுடன் இருக்க வேணும்
அட முப்போதும் தப்பாம
மந்திரம் படிக்க வேணும்

Naan ippodhum eppodhum
Unnudan irukka venum
Ada muppodhum thappaama
Mandhiram padikka venum

Adai mazhaikku odhungum
Mainaa kuruvi
Mayangi kidakkum
Meidhaan thazhuvi
Ippodhum ada eppodhum

Naan ippodhum eppodhum
Unnudan irukka venum
Ada muppodhum thappaama
Mandhiram padikka venum

Thanneeril vaazhum
Semmeena thookki
Kanneeril naan
Poda maattenae

Adi kasthoori maanae
Kannaalae naanae
Kalyaana poomaalai pottenae

Un perai cholli oyaadhu
Ul moochu vaangum poomaadhu
Kai vittu ponaal thaalaadhu
Mann vittu pogum vaazhaadhu

Adi aathaadi un mela
Naan vechcha paasam

Aagaayam pol ingae
Saagaamal vaazhum
Fe Needhaan naan endru
Naandhaan nee endru
Jeevan ondru dhegam rendu


Naan ippodhum adi eppodhum
Naan ippodhum eppodhum
Unnudan irukka venum
Ada muppodhum thappaama
Mandhiram padikka venum…aehh

Vaigaasi maasam Kai veesi vandha
Sangeedha poongaaththu needhaanaa

Un sangeedham kettu
Sadhiraattam podum
Singaara poondhoppu naandhaanaa

Un dhegam engum poovaasam
Kandaalae theerum aayaasam
Ondralla nooru maamanggam
Aanaalum vaazhum nam nesam

En vaai pesum pechellaam
Un pechi thaanae

Ul vaangum moochellaam
Un moochu thaanae
Aadum poondherae
Odum paalaarae
Ennai seru yekkam theeru

Naan ippodhum adi eppodhum
Naan ippodhum eppodhum
Unnudan irukka venum
Ada muppodhum thappaama
Mandhiram padikka venum

Adai mazhaikku odhungum
Mainaa kuruvi
Mayangi kidakkum
Meidhaan thazhuvi
Ippodhum hoi eppodhum

Naan ippodhum eppodhum
Unnudan irukka venum
Ada muppodhum thappaama
Mandhiram padikka venum

Naan Ipothum Song Lyrics from movie Chinna Thayee. Naan Ipothum song sung by S. P. Balasubramanyam, S. Janaki. Naan Ipothum Song Composed by Ilaiyaraaja. Naan Ipothum Song Lyrics was Penned by Vaali. Chinna Thayee movie cast Vignesh, Padmashri in the lead role actor and actress. Chinna Thayee movie released on 1992

Naan Ipothum Song Lyrics From Chinna Thayee | நான் இப்போதும் எப்போதும் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies