Aalanaalum Aalu

Aalanaalum Aalu Song Lyrics In English


ஆளானாலும் ஆளு
இவ அழுத்தமான ஆளு
மிச்ச வெவரம் வேணுமின்னா
மச்சான போயி கேளு கேளு

ஹேய் ஆளானாலும் ஆளு
இவ அழுத்தமான ஆளு
மிச்ச வெவரம் வேணுமின்னா
மச்சான போயி கேளு கேளு

ஆளானாலும் ஆளு
இவ அழுத்தமான ஆளு
மிச்ச வெவரம் வேணுமின்னா
மச்சான போயி கேளு கேளு

கனியும் காலம் வரும்
காதலுக்கு ஆளும் வரும்
கண்ணில் நாணம் வரும்
கால் விரலும் தாளமிடும்

கனியும் காலம் வரும்
காதலுக்கு ஆளும் வரும்
கண்ணில் நாணம் வரும்
கால் விரலும் தாளமிடும்

ஒனக்கு மாலை வரும்
ஊருக்கெல்லாம் ஓலை வரும்
தென்னம் பாளையிலே
தேன் சிதறும் வேளை வரும்
ஹேய் மாலை சூடும் தேதி எண்ணி
பத்து விரலும் தேயும்

ஆஅஆஅஆஅஆஆ
மாலை சூடும் தேதி எண்ணி
பத்து விரலும் தேயும்
இவ இழுத்து விடும் பெரும் மூச்சில்
ஈரச் சேலைக் காயும்

ஆளானாலும் ஆளு
இவ அழுத்தமான ஆளு
மிச்ச வெவரம் வேணுமின்னா
மச்சான போயி கேளு கேளு ஹஹஹா


வைரக்கொடி எடுத்து வாசல் எல்லாம் கோலமிடு
வானவில்லெடுத்து தோரணமாய் ஆட விடு
மின்னல் கீற்றெடுத்து மேகம் வரை பந்தலிடு
வெள்ளிப்பூ பறிச்சி வீதியெல்லாம் சிந்தி விடு

ஹேய் உள்ளப் போடி வெள்ளத்தாயி
இன்னும் என்ன பேச்சு
ஹே தன்னனானே தன்னனானே தான்னானே
ஹே தன்னனானே தன்னனானே தான்னானே
உள்ளப் போடி வெள்ளத்தாயி
இன்னும் என்ன பேச்சு
வரும் வெள்ளிக்கிழமை கல்யாணம்
வெத்தலை மாத்தியாச்சு

ஆளானாலும் ஆளு
இவ அழுத்தமான ஆளு
மிச்ச வெவரம் வேணுமின்னா
மச்சான போயி கேளு கேளு

ஹே கோரப்பாயிருக்கும்
குண்டு மல்லிப் பூவிருக்கும்
கையில் பாலிருக்கும் கதவுக்கு தாழிருக்கும்
கண்ணாடி வளையல் இவள்
கையெல்லாம் நெறஞ்சிருக்கும்
எந்திரிச்சு பார்க்கையிலே
எண்ணிக்கை கொறஞ்சிருக்கும்

முதல் முதலாப் பார்க்கும்போது
அச்சமாக இருக்கும்
ஆஅஆஆஅஆஹாஆஆ
ஹே முதல் முதலாப் பார்க்கும்போது
அச்சமாக இருக்கும்
ஆனால் விடியும்போது விளக்கில்
எண்ணை மிச்சமாக இருக்கும்

ஆளானாலும் ஆளு
இவ அழுத்தமான ஆளு
மிச்ச வெவரம் வேணுமின்னா
மச்சான போயி கேளு கேளு

ஆஹ ஹா ஆளானாலும் ஆளு
இவ அழுத்தமான ஆளு
மிச்ச வெவரம் வேணுமின்னா
மச்சான போயி கேளு கேளு