Aalilalilo

Aalilalilo Song Lyrics In English


ஆளிலாலிலோ
கண் தொறந்து தூங்கு
ஆளிலாலிலோ
என் சுக்கே என் சுண்டே

ஆளிலாலிலோ
காணோமே கிழக்கே
ஆளிலாலிலோ
என் தூங்கா விளக்கே

நாடு காடு கூடெல்லாம்
தீ தின்னு போச்சுதே
உன் கண்ணுக்குள்ளதான்
என் வாழ்க்க கெடக்கே



ஆளிலாலிலோ
கண் தொறந்து தூங்கு
ஆளிலாலிலோ
என் சுக்கே என் சுண்டே

வடிவேஏ
வடிவேஏ
என் சீலையே உன் மென்மெத்தையா
கொஞ்ச ஈரமே உன் பட்டாடையா

என் மீனே தூங்கடி
விழி ரெண்டும் மூடமா அன்பே
என் கண்ணீர் உன்மேல் வீழும்போதும்
ஏன்னு கேட்க்காம


எல்லாமே மாறி போகும்
இந்த வெறும வறும
பழகி போகும்
உன் சின்ன பார்வையாள
என் உலகம் வடிவாகும்



ஆளிலாலிலோ
வானம் பார்த்து தூங்கு
ஆலளிலாலிலோ
என் கண்ணே என் மனமே

ஆளிலாலிலோ
உலகெல்லாம் உனக்கே
ஆளிலாலிலோ
என் தூங்கா விளக்கே

பூவு முள்ளு காம்புதா
தீ தின்னு போச்சிதே
உன் கண்ணுகுள்ளதான்
என் வேரே கெடக்கே