Aalolam Paadum

Aalolam Paadum Song Lyrics In English


ஆலோலம் பாடும் தென்றலே
ஆகாயம் தேடும் திங்களே
ஆலோலம் பாடும் தென்றலே
ஆகாயம் தேடும் திங்களே

வட்ட வட்டப் பொட்டு வைத்து
வண்ண வண்ணப் பூ முடிக்க வா ஆ
சின்னச் சின்ன கன்னங்களில்
உண்ணுகின்ற தேனெடுத்து வாஆ

ஆலோலம் பாடும் தென்றலே
ஆகாயம் தேடும் திங்களே

உச்சி வெயில் சூடு பட்டு
வங்கக்கடல் காய்வதில்லை
வீசும் புயல் காற்றடித்து
வெள்ளி மலை சாய்வதில்லை

சந்திரனைப் போல இங்கு
சூரியனும் தேய்வதில்லை
மானிடரைப் போல இங்கு
காதல் என்றும் மாய்வதில்லை

நேச மனம் சேர்ந்திருக்க
காசு பணம் கேட்குமா
பேசுகின்ற பேதம் எல்லாம்
பாசங்களை தாக்குமா
வாழலாம்கூட வா
வாழலாம் கூட வா
நாளெலாம் நான் சூடும் பூவே

ஆலோலம் பாடும் தென்றலே
ஆகாயம் தேடும் திங்களே


உன்னை ஒரு நாள் மறந்து
என் மனது வாழ்ந்ததில்லை
உச்சரிக்கும் வார்த்தை எல்லாம்
உன்னை அன்றி வேறு இல்லை

பொன்னை அள்ளி நான் கொடுக்க
என்னிடத்தில் ஏதும் இல்லை
என்னை அள்ளி நான் கொடுத்தேன்
உன்னுடைய கைகளிலே

கண் இரண்டில் காதல் என்னும்
கோட்டை கட்டி வாழ்கிறேன்
ஊரறிய மாலை இட்டு
உன் மடியில் சேர்கிறேன்
காலமேகூடலாம்
காலமே கூடலாம்
மார்பிலே நான் மஞ்சம் போட

ஆலோலம் பாடும் தென்றலே
ஆகாயம் தேடும் திங்களே

வட்ட வட்டப் பொட்டு வைத்து
வண்ண வண்ணப் பூ முடிக்க வா ஆ
சின்னச் சின்ன கன்னங்களில்
உண்ணுகின்ற தேனெடுத்து வா ஆ

ஆண் மற்றும்
ஆலோலம் பாடும் தென்றலே
ஆகாயம் தேடும் திங்களே