Aarambame Ippathaannu

Aarambame Ippathaannu Song Lyrics In English


மற்றும் டி எல் மகாராஜன்

ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம் வாழ்க்க ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம் இதில் அறுபதென்ன எழுபதென்னடா ஹேய் ஆறு மாச பிள்ளையப் போல் சிரிப்போம் அட சிரிப்பதற்கு பல்லு எதுக்குடா

மனசு வச்சா நாம மார்க்கண்டேயன் தேவப்பட்டா நாம பீமசேனன் நரச்சுப் போன முடியக் கட்டி மலைய இழுப்போம் இந்த நரச்சுப் போன முடியக் கட்டி மலைய இழுப்போம்

கெழவா ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம் இதில் அறுபதென்ன எழுபதென்னடா ஹேய்

வாராய்வாராய் நீ வாராய் என் சோகக் கதை பிறர் கேட்டதில்லை நீ கேளாய் ஆஹா என்னிடம் கூறுவதாலே பாரமும் குறையுதோ மனதிலேஏஏ

பொருத்தமான துணையிருந்தும் பொங்கி வரும் அழகிருந்தும் பொருத்தமான துணையிருந்தும் பொங்கி வரும் அழகிருந்தும் சின்ன வீடு செட்டப் செஞ்சான் பிள்ளையே அத தட்டிக் கேட்டேன் தொரத்திப்புட்டான் என்னையே

தாரத்த விட்டு தரங்கெட்ட வீட்டுக்கு போனவன் பொறம்போக்கைய்யா எள்ளும் தண்ணீரும் தெளிச்சிடய்யா தாரத்த விட்டு தரங்கெட்ட வீட்டுக்கு போனவன் பொறம்போக்கைய்யா எள்ளும் தண்ணீரும் தெளிச்சிடய்யா

பூமியில் மானிடர் ஜென்மம் அடைந்துமோர் புண்ணியமின்றி தண்ணியடித்தேன் தாரமும் பிள்ளையும் தொல்லை ஒழிந்திட வீட்டை விட்டே என்னை விரட்டினரே

விஸ்கியா பிராந்தியா பட்டையா சிக்கனா மட்டனா முட்டையா விஸ்கியா பிராந்தியா பட்டையா சிக்கனா மட்டனா முட்டையா

ஒன்றில்லாமல் மற்றொன்று குஷி ஏறுமா வாய் கழுவாமல் இருக்கிறோம் ஒரு மாசமா கழுவினால் கிக்குதான் போய்விடும் போகட்டும் நாத்தம்தான் தொலையுமே

போனால் போகட்டும் போடாஇந்த ஓஓஹோஹ் ஓஓஒஹ்ஓஓஒஹ்

போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நாங்கள் வாழ்வது வீணடா போனால் போகட்டும் போடா


ரவிக்கை சேலை உள்பாவாடை அவளுக்கு தொவைச்சு போட்டானே மனைவியின் சொல்லை கேட்ட என் பிள்ளை தனியாய் குடித்தனம் போனானே

சோத்துக்கும் வழியும் தெரியவில்லை பிச்சை எடுக்கவும் மனசு வரல்ல எமனும் எங்களை அழிக்கவில்ல

என்னடி முனியம்மா உன் கண்ணுல தண்ணி இது பத்து மாச தண்ணி பெத்த பாசம் தந்த தண்ணி நான் முன்னாலே போறேன் நீங்க பின்னாலே வாங்க

மண்டைக்கு முடி பாரமா மட்டைக்கு பொடி பாரமா பீடிக்கு புகை பாரமா புத்தி கெட்ட பிள்ளைக்கு நீங்க பாரமா

நான் தோசை சுட்டால் இடியாப்பம் சுட்டால் நான் தோசை சுட்டால் இடியாப்பம் சுட்டால் என் புருஷனுக்கேனோ புடிக்கவில்லை என் சமையலிலே வந்த நடுக்கத்திலே விட்டு ஓடிப் போனவர் திரும்பவில்லை எங்கு தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை

நான் தோசை சுட்டால் இடியாப்பம் சுட்டால்

சமைஞ்சது சரிதானாஐய்யய்யோ சமைச்சது சரிதானா சொல் சொல் சொல் சொல் கிழவி எதை மறந்தாயோ ஏன் ஏன் ஏன் புசிக்கவில்லை சாம்பார் ஏன் ருசிக்கவில்லை

கிழம் நீயப்பா அழகு கிழம் நீயப்பா பேரழகு கிழம் நீயப்பா அய்யய்யோ ஆள விடு

அனைவரும் : ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம் வாழ்க்க ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம் இதில் அறுபதென்ன எழுபதென்னடா ஆறு மாச பிள்ளையப் போல் சிரிப்போம் அட சிரிப்பதற்கு பல்லு எதுக்குடா

அனைவரும் : மனசு வச்சா நாம மார்க்கண்டேயன் தேவப்பட்டா நாம பீமசேனன் நரச்சுப் போன முடியக் கட்டி மலைய இழுப்போம் எங்க நரச்சுப் போன முடியக் கட்டி மலைய இழுப்போம்

அனைவரும் : ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம் இதில் அறுபதென்ன எழுபதென்னடா