Aareeraaro Paadum |
|---|
ஆரீராரோ பாடும் அன்னை யாரோ
அன்னை தன்னை தேடும் பிள்ளை யாரோ
பிள்ளை ஆடும் தொட்டில் முல்லைத் தேரோ
முல்லைத் தேரில் ஏறும் மன்னன் யாரோ
ஆரீராரோ பாடும் அன்னை யாரோ
அன்னை தன்னை தேடும் பிள்ளை யாரோ
பட்டிக்காட்டு காத்து மெட்டுப் பாடும்
பட்டுப் போல வந்து தொட்டுப் பாடும்
தொட்டில் பாட்டு கேட்டு சொந்தம் கூடும்
சொந்தம் கூடும் நேரம் இன்பம் பாடும்
ஆரீராரோ ஆரோ ஆரீராரோ
ஆரீராரோ ஆரோ ஆரீராரோ