Aathangaraiyil Oru Rosa

Aathangaraiyil Oru Rosa Song Lyrics In English


பெண் ஹேய்

ஆண் ஹா ஹேய் ஹா ஹூ ஹா ஹூ ஹேய்

ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்கச் சொல்லிச்சு

கொஞ்சம் பக்கத்தில் வரச் சொல்லிச்சு
என்னைப் பார்த்து ரசிக்கச் சொல்லிச்சு

ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்கச் சொல்லிச்சு

பூவைப் பறிச்சேன் பொன்னாக நினைச்சேன்
பூப் போல நான் அணைச்சேன்
வாசமோ என்னை வாட்டுது
ஒரு வண்டாட்டம் நான் தவிச்சேன்

நல்ல சந்தனத்துக் காலெடுத்து
என்னருகில் நடக்கையில்
எண்ணி எண்ணி நான் துடிச்சேன்
நான் தெனம் தெனம் தூக்கத்தை மறந்தாச்சு
மனம் உன் நெனப்பில் கலந்தாச்சு

ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு

ஆடிப்பெருக்கு ஐயா உன் நெனப்பு
ஆறாத கதகதப்பு
ஆறுமோ மனம் தேறுமோ
இது ஆறாட்டி உன் பொறுப்பு

சின்னக் கன்னி மனம் பிஞ்சு மனம்
கொஞ்சி வந்து சிரிக்கிது என்ன இது உன் ரசிப்பு
நான் கனவில கண்ட சுகம் பலிச்சாச்சு
அது நெஜமுன்னு தெரிஞ்சாச்சு

ஆத்தங்கரையில் ஒரு ராசா சின்ன ராசா
வந்து கண்ணச் சிமிட்டி நின்னுச்சு
கொஞ்சம் கையப் புடிக்கச் சொல்லிச்சு
என்னை கட்டி அணைக்கச் சொல்லிச்சு

ஆண் தனனனா


பெண் தந்தானாத் தானத்
தந்தனனான தந்தனனான
தந்தத் தந்தன்னா

ஆண் தந்தானத் தனனனா

பெண் தந்தானாத் தாரத்
தந்தனனான தந்தனனான
தந்தத் தந்தன்னா

ஆசை மனசு அம்மாடி புதுசு
ஆளான இளம் வயசு

ஆடுது தினம் பாடுது நிறம்
வாடாத புது சொகுசு

முத்துப் பல்லிருக்கு முத்தழகு சொல்லிருக்கு
மயக்குது கட்டழகுச் சிறு வயசு

நீ மெல்ல மெல்லப் புன்னகையில்
கன்னி மனம் பொறுக்காதே

ஆண் ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்கச் சொல்லிச்சு

பெண் கொஞ்சம் கையப் புடிக்க சொல்லிச்சு
என்னை கட்டி அணைக்கச் சொல்லிச்சு

தந்தானத் தான தந்தன்னா னா
தந்தன்னா னா
தானா தானானத் தந்தன்னா னா
தானா தானானத் தந்தன்னா னா