Ada Avatharam Eduthu

Ada Avatharam Eduthu Song Lyrics In English


அட அவதாரம் எடுத்து வந்தால் அப்ப ராமன் தான் கதாநாயகன் கொஞ்சம் மேக்கப் போட்டு வந்தால் இப்ப நான் கூட கதாநாயகன்

உள்ளுக்குள் எல்லாமே மோசம் இது உண்மைக்கு திண்டாடும் தேசம் ஊரோடு நாம் வாழும் வாழ்க்கை அது அரிதாரம் பூசாத வேஷம்

உண்மைகள் வெளியாகும் லேட்டா இங்கே ஆண்டி வேஷம் போட்டவனே டாட்டா உண்மைகள் வெளியாகும் லேட்டா இங்கே ஆண்டி வேஷம் போட்டவனே டாட்டா

கொஞ்சம் கையோடு காசிருந்தா இப்ப எல்லாரும் கதாநாயகன்

அட அவதாரம் எடுத்து வந்தால் அப்ப ராமன் தான் கதாநாயகன் கொஞ்சம் மேக்கப் போட்டு வந்தால் இப்ப நான் கூட கதாநாயகன்


பாடாத குயில் கூட உண்டு பாட்டு படிக்கின்ற கோட்டானும் உண்டு தகுதிக்கு மரியாதை எங்கே வெறும் பதவிக்கு மரியாதை இங்கே

வாய்விட்டு பேசாது வைரம் இங்கே சத்தமிட்டால் பித்தளையும் தங்கம் வாய்விட்டு பேசாது வைரம் இங்கே சத்தமிட்டால் பித்தளையும் தங்கம்

நாடெல்லாம் சிரிக்க வைக்க இப்ப நான்தானே கதாநாயகன் தமிழ்நாடெல்லாம் சிரிக்க வைக்க இப்ப நான்தானே கதாநாயகன்

அட அவதாரம் எடுத்து வந்தால் அப்ப ராமன் தான் கதாநாயகன் கொஞ்சம் மேக்கப் போட்டு வந்தால் இப்ப நான் கூட கதாநாயகன்