Adi Maadi

Adi Maadi Song Lyrics In English


அடி மாடி வீட்டு மானேஏ
உன்னை கட்டிக்கிட்டேன் நானேஏ
அடி மாடி வீட்டு மானே
உன்னை கட்டிக்கிட்டேன் நானே

அய்யரு வைக்கல
அம்மி மிதிக்கல
அய்யரு வைக்கல
அம்மி மிதிக்கல
மேளமும் கொட்டல
தாலியும் கட்டல
கல்யாணம்தான் ஆகிப் போச்சு
இன்னிக்கு முதல் இரவு
என்ன ஆச்சு

அடி மாடி வீட்டு மானே
உன்னை கட்டிக்கிட்டேன் நானே

கல்யாணம் முடிஞ்சு
கதவுகள் சாத்தும்
கதவுகள் சாத்தி கல்யாணமா
கல்யாணம் முடிஞ்சு
கதவுகள் சாத்தும்
கதவுகள் சாத்தி கல்யாணமா

தட்டோடு பால் பழங்கள்
எங்கே பெண்ணே
நான் உண்ணும் பால் பழங்கள்
நீ கண்ணே
தட்டோடு பால் பழங்கள்
எங்கே பெண்ணே
நான் உண்ணும் பால் பழங்கள்
நீ கண்ணே

கண்களில் என்னடி கண்ணீரா
கன்னத்தில சுடும் வெந்நீரா
ஆளான அன்னக் கிளி
கூசாமல் பேசாதா
அத்தானை அள்ளிக் கொள்ளாதா

அடி மாடி வீட்டு மானேஏ
உன்னை கட்டிக்கிட்டேன் நானேஏ
அடி மாடி வீட்டு மானே
உன்னை கட்டிக்கிட்டேன் நானே


அய்யரு வைக்கல
அம்மி மிதிக்கல
அய்யரு வைக்கல
அம்மி மிதிக்கல
மேளமும் கொட்டல
தாலியும் கட்டல
கல்யாணம்தான் ஆகிப் போச்சு
இன்னிக்கு முதல் இரவு
என்ன ஆச்சுஹ

கண்ணான கண்ணே
கல்யாணப் பொண்ணே
ஆள வச்சு அடிப்பான்
என் மாமனே
கண்ணான கண்ணே
கல்யாணப் பொண்ணே
ஆள வச்சு அடிப்பான்
என் மாமனே

வாளேந்திப் பகை முடிப்பான்
வாஞ்சிநாதன்
என்னோடு துணை இருப்பான்
என் தோழன்
வாளேந்திப் பகை முடிப்பான்
வாஞ்சிநாதன்
என்னோடு துணை இருப்பான்
என் தோழன்

வானம் இடிந்து வந்தாலும்
பூமி இரண்டாய் போனாலும்
நான் இன்று வச்ச பொட்டு
மாறாது மாறாது
ஏழேழு ஜென்மம் காணாது

நான் மாடி வீட்டு மானேஏ
உன்னை தேடி வந்தேன் நானேஏ
நான் மாடி வீட்டு மானே
உன்னை தேடி வந்தேன் நானே

அய்யரு வைக்கல
அம்மி மிதிக்கல
அய்யரு வைக்கல
அம்மி மிதிக்கல
மேளமும் கொட்டல
தாலியும் கட்டல
காதலுக்கு ஆயுள் நூறு
இந்தக் கண்ணீருக்கு அர்த்தம் வேறு
காதலுக்கு ஆயுள் நூறு
இந்தக் கண்ணீருக்கு அர்த்தம் வேறு