Adi Paaduthe Paaduthe

Adi Paaduthe Paaduthe Song Lyrics In English


அடி பாடுதே பாடுதே பூஞ்சோலைக் குயில் ஒன்னு பாட்டுக்கு அர்த்தம் சொல்லு ஆஹா ஓஹோ குயில் பாடுதே பாடுதே பாட்டுக்கு அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு ஆஹா ஆஹா

அடி குக்கூனா பக்கம் வா அடி குக்கூனா முத்தம் தா இது நீ சொல்லும் பாஷை குயில் சொல்லாத பாஷை நீ என் காதில் பூ சுத்தாதே

ஹோய் அம்மாடி என்னை நம்பு ஆகாது இந்த வம்பு ஹை செல்லாது உன் குறும்பு ஹ ஆகாது இந்த வம்பு

அடி பாடுதே பாடுதே பூஞ்சோலைக் குயில் ஒன்னு பாட்டுக்கு அர்த்தம் சொல்லு ஹோய் குயில் பாடுதே பாடுதே பாட்டுக்கு அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு

கண்மணி உப்பில்லாத வாழ்வில் ஹோய் முத்தமிட்டு சக்கரை சேரு காதலில் முத்தமொரு பாகம்தான் முத்தம் மட்டும் காதலாகாது

மீண்டும் சிறு பிள்ளையாகி நாம் கொஞ்சம் விளையாடலாம் போதும் விளையாட்டும் உன்னிடம் இங்கே வினையாகலாம்

வெட்கத்தை ஒத்தி வை அச்சத்தை பொத்தி வை முத்தத்தில் மோட்சம் வரச்செய் ஹ ஹா

ஹ செல்லாது உன் குறும்பு ஹ ஆகாது இந்த வம்பு அட அம்மாடி என்னை நம்பு ஆகாது இந்த வம்பு

குயில் பாடுதே பாடுதே பாட்டுக்கு அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு அடி பாடுதே பாடுதே பூஞ்சோலைக் குயில் ஒன்னு பாட்டுக்கு அர்த்தம் சொல்லு ஹோய் ஹோய்


காதலாம் நந்தவனச் சோலையில் பூக்கள் இனி கிள்ளக்கூடாது பூவே நீ அபிநயத்தில் அழைக்கிறாய் பக்கம் வந்தால் தள்ளக்கூடாது

கண்ணா குறும்பான விரல்களை எங்கே தண்டிப்பது அன்பேஎன் கொள்கை என்பது எல்லாம் மன்னிப்பது

வரம்பை மீறாதே குறும்பை வீசாதே அழகை கொள்ளையிடாதே

ஹேய் அம்மாடி என்னை நம்பு ஆகாது இந்த வம்பு ஹஹா செல்லாது உன் குறும்பு ஹ ஆகாது இந்த வம்பு

அடி பாடுதே பாடுதே பூஞ்சோலைக் குயில் ஒன்னு பாட்டுக்கு அர்த்தம் சொல்லு ஹோய் குயில் பாடுதே பாடுதே பாட்டுக்கு அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு

அடி குக்கூனா பக்கம் வா அடி குக்கூனா முத்தம் தா இது நீ சொல்லும் பாஷை குயில் சொல்லாத பாஷை நீ என் காதில் பூ சுத்தாதே

ஹோய் ஹோய் ஹோய் அம்மாடி என்னை நம்பு ஆகாது இந்த வம்பு ஹை செல்லாது உன் குறும்பு ஹா ஆகாது இந்த வம்பு