Adikuthu Kuliru |
|---|
அடிக்குது குளிரு ஹா
துடிக்குது தளிரு
ஹான்
அடிக்குது குளிரு
துடிக்குது தளிரு
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பைபோல உன் அன்பை தேடுது
வா கட்டபொம்மன் பேரா
கட்டழகு வீரா
கிட்ட வந்து நேரா
கட்டிக்கொள்ளு ஜோரா
அடிக்குது குளிரு
ஆ அது செரி அது செரி
துடிக்குது தளிரு
இத பாருடா
முல்லை பூங்கொடி
கொம்பை தேடுது
அப்டியா
கொம்பைபோல உன்
அன்பை தேடுது
ஓஹோ
வா கட்டபொம்மன் பேரா
கட்டழகு வீரா
எப்டி எப்டி
கிட்ட வந்து நேரா
கட்டிக்கொள்ளு ஜோரா
அள்ளி சேர்க்க ஆசை இல்லையோ
ஆடிரதம் அழைக்குது
ஆஆஆய்ய்
கிள்ளி பார்க்க எண்ணமில்லையோ
ஆலிலை தவிக்குது
ஓஓஹோ
முத்தம் நூறு கேட்டு
வாங்கவே
நாணம் என்னை தடுக்குது
அட்ரா சக்க
பித்தம் ஏறி தூண்டில் மீனென
நூலிடை துடிக்குது
இது எப்படி இருக்கு
சுகமான கட்டில் நாடகம்
நீயும் நானும் ஆடலாம்
ஆஹா
வெள்ளி வானில் தோன்றும் மட்டிலும்
வெட்கமின்றி கூடலாம்
அப்டி போடு
உன்னை பார்த்து நான்
சொக்கி போகிறேன்
வா கட்டபொம்மன் பேரா
கட்டி கொள்ளு ஜோரா
அடிக்குது குளிரு
ஆ அது செரி அது செரி
துடிக்குது தளிரு
அது ரொம்ப செரி ரொம்ப செரி
சொன்னால் போதும்
நூறு மாப்பிள்ளை
மாலையிட கிடைக்கலாம்
இங்கே வந்து காலை மாலை தான்
சேலையை துவைக்கலாம்
என்னைபோல நல்ல மாப்பிள்ளை
வாய்ப்பதொரு அதிசயம்
என்னை நீயும் ஏற்றுக்கொண்டது
பாவை என் பாக்கியம்
நெடு நாட்கள் ஏங்கும்
ஏக்கம் தான்
இந்நாள் இங்கு தீர்ந்தது
இல்லையா பின்ன
மங்கை செய்த பூர்வ புண்ணியம்
மன்னன் வந்து சேர்ந்தது
போச்சுடா
உன்னை பார்த்து நான்
சொக்கி போகிறேன்
வா கட்டபொம்மன் பேரா
கட்டி கொள்ளு ஜோரா
அடிக்குது குளிரு
ஆஆ அஹ்ஹஹாஹா
என்னை மடக்குது தளிரு
ம்ம்ஹ்ம்ஹாஹா
முல்லை பூங்கொடி
ம்ம்ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்
கொம்பை தேடுது
ஹ ஹ ஹ ஹா
கொம்பைபோல என்
ஹ ஹ ஹ ஹா
அன்பை தேடுது
வாரேவாரேவா
கட்டிதங்க மேனி கட்டழகு ராணி
அஹா ஆஹ்
கொட்டி பார்த்த தேனீ
ஆஆ ஆஆ அஹ அஹ்ஹ
கட்டில் பக்கம் வா நீ
அஹ்ஹ்,ஹா ஹா
அடிக்குது குளிரு
