Alavuthan Oru Alavuthan

Alavuthan Oru Alavuthan Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ஜி ராமநாதன்

ஆண் : அளவுதான்  அளவுதான் ஒரு அளவுதான் ஆசைக் கொண்ட மன ஸ்நேகம் என்பதொரு அளவுதான் உயிரைக் கொடுப்பேன் என்பதெல்லாம் வெறும் உதவாக்கரை பேச்சு ஆனா உனக்கே சரியாச்சு அது நல்லா உறுதியாயிப் போச்சு ஆசைக் கொண்ட மன ஸ்நேகம் என்பதொரு அளவுதான்

ஆண் : பாம்பைக் கண்டால் படை நடுங்கும் என்றொரு பழமொழி உண்டு அந்தப் பழமொழி தெரிஞ்சும் பகட்டாய் வீரம் பேசித் திரியும் மண்டு ஆசைக் கொண்ட மன ஸ்நேகம் என்பதொரு அளவுதான்


ஆண் : கண்ணால் உணவை கண்டதும் காக்கை கா கா வென்றே பாடி காக்கை கா கா வென்றே பாடி தன் கூட்டத்தாரையும் தேடி அழைத்துண்ண காரணம் ஸ்நேகம் இன்றி என்ன சொல்லு அம்மாடி

பெண் : காகம் கரைந்து வா என்றழைப்பது கலந்து உண்பதற்கல்ல தன் பயத்தைப் போக்கிக் கொள்ள இதைக் கண்டு கொள்ளவே வேணுமின்னா ஒரு துண்டைப் போட்டுப் பார் மெல்ல ரொட்டித் துண்டைப் போட்டுப் பார் மெல்ல போட்டா பெண் : டபார்ன்னு கொத்திக்கிட்டு ஓடியே போயிடும்