Amma Nee Kannamoochi |
|---|
ஆஅ ஆஅ ஆஆ
ஆஅ ஆஆஅ ஆஆஅ
ஆஅ ஆஆஅ ஆஆஅ
ஆஅ ஆஆஅ ஆஆஅ
அம்மா நீ கண்ணாமூச்சி
ஆடிடலாமா
அன்பு முகம் காணாமல்
நான் வாடிடலாமா
ஒரு மனம் மெழுகென
உருகுது உன்னாலே
உன்னை அழைத்தேனே
குரல் கொடுத்தேனே
அம்மா நீ கண்ணாமூச்சி
ஆடிடலாமா
அன்பு முகம் காணாமல்
நான் வாடிடலாமா
ஊர்கோலம் போகும் மேகங்களே
எங்கே என் தாய் என்று கூறுங்களே
ஆகாயம் நீந்தும் பறவைகளே
என் தாயை அழைத்திங்கு
வாருங்களே
இருவரும் வேறு திசை இருக்க
இடையினில் காலம் திரை இருக்க
திரைகளும் இங்கே விலகாதோ
தாய் முகம் கண்ணில் தெரியாதோ
ஒரு மனம் மெழுகென
உருகுது உன்னாலே
உன்னை அழைத்தேனே
குரல் கொடுத்தேனே
அம்மா நீ கண்ணாமூச்சி
ஆடிடலாமா
அன்பு முகம் காணாமல்
நான் வாடிடலாமா
சீதாவைத் தேடி ஸ்ரீராமன்தான்
காடென்றும் மேடென்றும்
அலைந்தானம்மா
மாதாவைத் தேடி மகள் வந்தது
வால்மீகி எழுதாத கதை தானம்மா
துடிக்குது இங்கே ஒரு மனமே
கிடைத்திட வேண்டும் தரிசனமே
நினைவுகள் யாவும் நீயாக
பலவழி தாண்டி நான் போக
ஒரு மனம் மெழுகென
உருகுது உன்னாலே
உன்னை அழைத்தேனே
குரல் கொடுத்தேனே
அம்மா நீ கண்ணாமூச்சி
ஆடிடலாமா
அன்பு முகம் காணாமல்
நான் வாடிடலாமா
ஒரு மனம் மெழுகென
உருகுது உன்னாலே
உன்னை அழைத்தேனே
குரல் கொடுத்தேனே
