Anaiyaatha Deepam

Anaiyaatha Deepam Song Lyrics In English


ம்ம்ம்ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம்
அணையாத தீபம் மனிதாபிமானம்
உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ
அணையாத தீபம் மனிதாபிமானம்
உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ

கால் போன ஜீவனை தோள் மீது கொண்டு
காப்பாற்றி வைத்தான் சித்தார்த்த தேவன்
சிந்தாத கண்ணீர் நான் சிந்துகின்றேன்
சித்தார்த்தன் இங்கே யாரேனும் உண்டோ

பாவங்கள் சிலர் செய்ய
நான் பாவியானேன்
பரிகாரம் எங்கே தேவாதேவா

அணையாத தீபம் மனிதாபிமானம்
உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ

நபிநாயகம் தன் நகர் மாறிச் சென்றார்
அயலார்கள் ஏச வருங்காலம் பேச
எதிர்கால உலகில் மரமாக நின்றார்
இங்கேயும் அவரின் நிழல் வாழுகின்றார்
எல்லார்க்கும் தாயான மாகாளி சக்தி
என் தெய்வம் நீயே நீயே தாயே


கலைமாது மேரி ஓர் விலைமாது என்று
கல்லால் எறிந்தார்கள் ஊரார்கள் அன்று
நல்லோர்கள் அவள் மேல் எறியுங்கள் என்று
அல்லோர்கள் தம்மை அறியுங்கள் என்று

ஈசோன் என்ற ஒரு தேவன் சொன்னான்
எறியுங்கள் நீங்கள்
எறியுங்கள் நீங்கள் ஐயாஐயா

அணையாத தீபம் மனிதாபிமானம்
உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ