Anbae Anbae |
|---|
அன்பே அன்பே அன்பே அன்பே
நீயின்றி நான் இல்லையே
அன்பே அன்பே அன்பே அன்பே
நீயின்றி நான் இல்லையே
அன்பே அன்பே அன்பே அன்பே
என்னோடு நானில்லையே
ஒரே முறை ஒரே முறை
ஒரே முறை பாரடி
ஒரே முறை ஒரே முறை
ஒரே முறை பாரடா
அன்பே அன்பே அன்பே அன்பே
நீயின்றி நான் இல்லையே
ஓட்டுக்குள்ளே நத்தையை போல்
ஒளிந்திருந்த ஒரு நெஞ்சம்
பறவை போலே பறகிறதே
பார்த்து கொள்ளு நீ கொஞ்சம்
மின்னல் வந்து விளக்கேற்றும்
மேகம் வந்து தாலாட்டும்
நினைக்கும் திசையில் பறந்திடலாம்
காதல் உனக்கு கை கொடுக்கும்
குட்டி குட்டி செடி அது
தொட்டில் கட்டும் மலர் தினம்
உன் பெயரை சொல்லி அது அழைக்கிறதே
பெற்றவர்கள் முகம் சுற்றி
உள்ளவர்கள் முகம் அட
அத்தனையும் நெஞ்சம் இன்று மறக்கிறதே
ஓநீயின்றி நான் இல்லை
அது நிச்சயம்
ஒரே முறை ஒரே முறை
ஒரே முறை பாரடா
ஒரே முறை ஒரே முறை
ஒரே முறை பாரடி
அன்பே அன்பே
ல லால லல லல லால
அன்பே அன்பே
ல லால லல லல லால
தேவதையின் கதை கேட்டு
சின்ன வயதில் தூங்கினேன்
தூக்கம் பறிக்கும் தேவதையை
நேரில் இன்று பார்க்கிறேன்
சின்ன வயதில் பார்த்த நிலா
தூரமாகி போகலாம்
இந்த வயதில் நீ நினைத்தால்
நிலவின் மடியில் வாழலாம்
ஓ காதல் ஒரு வானம் அதில்
அலைவது சுகமே
சுற்றி சுற்றி எங்கும் நாம்
நடந்திடலாம்
காதல் ஒரு மழை அதில்
தேவை இல்லை குடை வா
சொட்ட சொட்ட அதில் நாம்
நனைந்துடலாம்
ஓநீயின்றி நான் இல்லை
அது நிச்சயம்
ஒரே முறை ஒரே முறை
ஒரே முறை பாரடா
ஒரே முறை ஒரே முறை
ஒரே முறை பாரடி
அன்பே அன்பே அன்பே அன்பே
நீயின்றி நான் இல்லையே
அன்பே அன்பே அன்பே அன்பே
என்னோடு நானில்லையே
