Anbae Peranbae

Anbae Peranbae Song Lyrics In English


அன்பேஅன்பே அன்பே அன்பே
அன்பேஅன்பே அன்பே அன்பே
பேரன்பேபேரன்பே பேரன்பே
பேரன்பேபேரன்பே பேரன்பே

ஹோ ஓ ஓ ஹோ

ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்
உறவொன்று கேட்கிறேன்
வரைமீறும் இவளின் ஆசை
நிறைவேற பார்க்கிறேன்
நதி சேரும் கடலின் மீது
மழை நீராய் சேருவேன்

அமுதே பேரமுதே
பெண் மனதின் கனவின்
ஏக்கம் தீர்க்குமாஈர்க்குமாஆஅ
மதியை தன் மதியை
இவன் அழகின் பிம்பம்
கண்கள் பார்க்குமாதோற்குமா

மழைவானம் தூறும் போது
மணல் என்ன கூசுமோ
மலரோடு மலர்கள்கூட
ஊர் என்ன தூற்றுமோ

திரையே திரை கடலே
உன் அதிரும் அன்பு
மதிலை தாண்டுதேதூண்டுதே


ஆஅஆஅஆ
நெஞ்சோரம் தூங்கும் மோகம்
கண்ணோரம் தூபம் போட
சொல்லாத ரகசியம் நீதானே
ஊர் கேட்க்க ஏங்குதே

தனிமையில் துணை வரும் யோசனை
நினைவிலும் மணக்குது உன் வாசனை
எல்லாமே ஒன்றாக மாறுதே
மணந்திட சேவல் கூவுதே

ஓ கோடை காலத்தின் மேகங்கள்
கார்காலம் தூறும்ம்ம்ம்ம்
ஆள் இல்லாத காட்டிலும்
பூபாளம் கேட்க்கும்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

இருவர் : அன்பே பேரன்பே
நெடுவாழ்வின் நிழல்கள்
வண்ணம் ஆகுதே ஆகுதேஏஏ
உறவே நம் உறவே
ஒரு அணுவின் பிரிவில்
அன்றில் ஆகுதே ஆகுதே

ஹோ ஹோ ஓ
உறையாத சொல்லின் பொருளை
மொழி இங்கு தாங்குமோ
உறவாக அன்பில் வாழ
ஒரு ஆயுள் போதுமோ