Anbulla Maan Vizhiyae

Anbulla Maan Vizhiyae Song Lyrics In English


அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர்க் காதலில் ஓர் கவிதை

அன்புள்ள
மன்னவனே ஆசையில்
ஓர் கடிதம் அதைக் கைகளில்
எழுதவில்லை இரு கண்களில்
எழுதி வந்தேன்

நலம் நலம்தானா
முல்லை மலரே சுகம்
சுகம்தானா முத்து சுடரே

இளைய கன்னியின்
இடை மெலிந்ததோ எடுத்த
எடுப்பிலே நடை தளர்ந்ததோ

வண்ணப் பூங்கொடி
வடிவம் கொண்டதோ வாடைக்
காற்றிலே வாடி நின்றதோ

அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர்க் காதலில் ஓர் கவிதை

நலம் நலம்தானே
நீ இருந்தால் சுகம் சுகம்
தானே நினைவிருந்தால்

இடை மெலிந்தது
இயற்கையல்லவா நடை
தளர்ந்தது நாணம் அல்லவா

வண்ணப் பூங்கொடி
பெண்மை அல்லவா வாட
வைத்ததும் உண்மை அல்லவா

அன்புள்ள
மன்னவனே ஆசையில்
ஓர் கடிதம் அதைக் கைகளில்
எழுதவில்லை இரு கண்களில்
எழுதி வந்தேன்


அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர்க் காதலில் ஓர் கவிதை

உனக்கு ஒரு பாடம்
சொல்ல வந்தேன் எனக்கு
ஒரு பாடம் கேட்டு கொண்டேன்

பருவம் என்பதே
பாடம் அல்லவா பாவை
என்பதே பள்ளி அல்லவா

ஆண் & ஒருவர்
சொல்லவும் ஒருவர்
கேட்கவும் இரவும் வந்தது
நிலவும் வந்தது

அன்புள்ள மான்விழியே

ஆசையில் ஓர் கடிதம்

அதை கைகளில் எழுதவில்லை

இரு கண்களில் எழுதி வந்தேன்