Andipatti |
---|
ஆண்டிப்பட்டி மாரியப்பன் பெண்டாட்டி
நான் பெண்டாட்டி
அட இதுக்கு மேலே என்னத்தை
சொல்ல அண்ணாச்சி (வசனம்)
அண்ணாச்சியா
அந்த மாறி உறவெல்லாம் நமக்கு பிடிக்காது
பாசம் வேற ரூட்ல போவ கூடாது
நான் ஆசையோடதான் வாக்கப்பட்டேனே
ஆறு மாசம் ஆனா பின்னே ஏய்ச்சு புட்டானே
ஏய்ச்சு புட்டானே அட பாவி
அப்புறம் என்னம்மா ஆச்சு
குருத்து வாழை கண்ணு போல
குருவம்மா நான் இருக்க
குருவம்மா
குருவம்மாடா
கூறு கெட்ட அத்தை மகன்
வேறோருத்தியோடு சகவாசம்
மிளகாய் பழம் போல
முத்ததிலே வந்து நிக்கேன்
மூதேவி அத்தை மகன்
முண்டச்சி சகவாசம்(வசனம்)
அழாத அழாதம்மா அழாத அழாத
கெட்ட பய போல இருக்குப்பா
குருவம்மா நீ என்னிக்கோ வந்திருக்க வேண்டியவ
அப்பறம்
ஆண்டிப்பட்டி மாரியப்பன் பெண்டாட்டி
நான் பெண்டாட்டி
அட இதுக்கு மேலே என்னத்தை
சொல்ல அண்ணாச்சி
டேய் கேட்டுகடா ஒன்னத்தான்
அட சீ நீ சும்மா இர்றா
ஆமாநீ ஒன்னு
உம் புருஷன சரியா கவனிகிறதில்லையோ
பலகாரம் கிலகாரம் பண்ணி போட்டு
அப்படியே கவர் பண்ண வேண்டியதுதானே
பதினெட்டு பணியாரம் மதிலெட்டி கொடுத்தாலும்
இரவலெடி எம் புருஷன்
ஒனக்கு இரவெலடி எம் புருஷன்
எம் புருஷன் எம் புருஷன் எனக்குதான் சொந்தமடி
அடியாத்தி
எம் புருஷன் எம் புருஷன் எனக்குதான் சொந்தமடி
எனக்குதான் சொந்தமடி
ஒம் புருஷன் ஒனக்குதான் சொந்தம்
எம் புருசனா அவன் எனக்கா சொந்தம்
நான்கென்னா அந்த மாறி ஆளுங்களா
அத்தாப்பு வீடு கட்டி அண்ணாச்சி
அதில அழகாக ரெண்டு ஜன்னல் வைச்சாச்சு
ஜன்னல வெச்சுக்கோ
அன்னாச்சியா அப்படியே தூக்கிடு
எட்டி எட்டி பார்த்தாலும் எட்டாம போச்சு
ஒட்டி ஒட்டி பார்த்தாலும் ஒட்டாம போச்சு
நல்ல வேல ஒட்டாம போச்சு
திருப்பி கிருப்பி ஒட்டுறேனு வந்தாலும் நீ ஒட்டிக்காதே
அவனே செருப்பாலையே அடிக்கணும்
செட்டிக்கடை வெட்டிவேரு சிவகாசி பன்னீரு
மருதக்கடை சக்களத்தி மறக்க பொடி போட்டாளே
குருத வாழை கருது போல
குடும்ப பொண்ணு நான் இருக்க
வெள்ளி மூக்கு அழகுக்காக
வேற வழி போகலாமா
அதெல்லாம் போகக் கூடாது தப்பு தப்பு
பூசணிகீரை தாரேன் புத்தி கெட்ட சக்களத்தி
சாரணத்து கீரை தாரேன் சாமியைத்தான் விட்றடி
அழாதம்மா
கபோதி பய அப்டியா மயங்கி கெடந்தான்
அவ என்ன பெரியசாவக அழகியா
அவ எப்படிமா இருப்பா அதா கொஞ்சம் சொல்லு
அவளா
சொல்லு அவதான்
காலு ரெண்டும் ஒட்டக்காலு
அண்ணாச்சி என் அண்ணாச்சி
அட கண்ணு ரெண்டும்
நொள்ளை கண்ணு அண்ணாச்சி
அய்யய்யோ மறுபடியும் மறுபடியும்
அண்ணாச்சிகுறாடா டேய்
நொள்ளை கண்ணு சக்களத்தி அண்ணாச்சி
அட போட்டுப்புட்டா சொக்குப்பொடி அண்ணாச்சி
என்ன செய்ய
அழாதே
ஏது செய்ய
நீ அழுதா என்னால தாங்க முடியாது
நான் இருக்க கூட இப்போ ஒரு இடமே இல்லை
என்னாது எடம் இல்லையா
இந்தா பாரு குருவம்மா
நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்ன்னாயிட்டம்
மாரியப்பன் வர வரைக்கும்
இந்த எடத்துல நல்லா கெடந்து உருளு உருளுவோம்
ஆண்டிப்பட்டி மாரியப்பன் பெண்டாட்டி
நான் பெண்டாட்டி
அட இதுக்கு மேலே என்னத்தை
சொல்ல அண்ணாச்சி