Andru Kollum

Andru Kollum Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ஆர் சுதர்சனம்

நீதியே நீயும் இருக்கின்றாயா
இல்லை நீயும் அந்த கொலைக் களத்தில்
உயிர் விட்டாயா

அன்று கொல்லும் அரசின் ஆணை
வென்று விட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே
வந்து விட்டது

அன்று கொல்லும் அரசின் ஆணை
வென்று விட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே
வந்து விட்டது

காலடித் தாமரை நோவது மறந்து
காதலனோடு நடந்தாளே
அந்தக் காலமும் தொடர்ந்து நடந்ததை அறிந்து
கற்புக்கரசி துடித்தாளே
அடையாக் கதவாய் இமையா விழியாய்
ஆயிரம் யுகங்கள் பொறுத்தாளே
இன்று விளையா நிலத்தின் விதையாய்ப் போன
வேதனை அறிந்து துடித்தாளே


அன்று கொல்லும் அரசின் ஆணை
வென்று விட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே
வந்து விட்டது

வெயிலே இல்லாத காலத்தில் கிடைக்கின்ற
வேதாத் பயனென்ன
கெஞ்சி வேண்டிய பொழுது ஒதுங்கிய நீதி
வந்தென்ன போயென்ன

உயிரே போன பின் உடலெனும் கூட்டுக்கு
உயர்வென்ன தாழ்வென்ன
செய்யாப் பிழைக்கே தலையது வீழ்ந்தால்
செய்தவன் கதி என்ன செய்தவன் கதி என்ன
பிழை செய்தவன் கதி என்ன