Anna Namam Vazhiyave

Anna Namam Vazhiyave Song Lyrics In English




அண்ணா நாமம் வாழியவே
ரத்தத்துக்கு ரத்தம் நீயே

அண்ணா நாமம் வாழியவே
ரத்தத்துக்கு ரத்தம் நீயே
ரெட்டை இலை போலவேதான்
கல்யாண பெண்ணும் நீயும்
இன்று போல் என்றும் வாழ்க

அண்ணா நாமம் வாழியவே
ரத்தத்துக்கு ரத்தம் நீயே

ஹேய் ஹேய் ஹெஹ்ஹே
ஆ ஆஹ் அஹஹாஹ்

நானொரு கல்யாண ராமன்தான்
மாப்பிள்ளை உன்னோட தோழன்தான்
மேடையில் பாரு நீ ராஜபார்வை ஹஹா
ஜாடையில் பேசுவா சிகப்பு ரோஜா

பூ மெத்தை போட்டாக்க மொத ராத்திரி
புரியாம முழிக்காத ஒரு மாதிரி
சரசமெல்லாம் சொல்லுவேன்
சகலகலா வல்லவன் நான்

எங்கள் அன்னை வாழியவே
பிள்ளைங்களும் வாழியவே
எங்கள் அன்னை வாழியவே
பிள்ளைங்களும் வாழியவே


கையை நம்பி வாழு தம்பி
உன் கையும் பெண்ணின் கையும்
ஒன்று போல் என்றும் வாழ்க

எங்கள் அன்னை வாழியவே
பிள்ளைங்களும் வாழியவே

இரண்டு இதயங்கள் ஒன்றையொன்று
சந்திக்கும்போது
காதல் பிறக்கும் கல்யாணம் நடக்கும்
பிறகு ஒருவரையொருவர்
எதிர்த்து பேசமுடியவில்லையே
ஓ மதர் இவர்களை ஆசீர்வதியுங்கள்

நண்பனே நான் கூட தோழன்தான்
ஹா நாட்டுல சூப்பர் ஸ்டாருதான்
ஆஹ்துடிக்கும் கரங்களை மெல்ல புடிச்சு
கெட்டியா போட வேணும் மூணு முடிச்சு

பருவத்தில் என்னாட்டம் பாயும் புலி
பக்கத்தில் இருக்காளோ காயத்திரி
நல்லவனுக்கு நல்லவன்
நல்லாயிருன்னு சொல்வேன் நான்

உன்னை மாதிரி நான் மகான் அல்ல
உன் அன்புக்கு நான் அடிமை
ஆறிலிருந்து நீ அறுபது வரை நல்லாயிருக்கனும்
ஏன் அதுக்கு அப்புறமும் கூட
நீங்க நல்லாயிருக்கணும்