Bhaaradham

Bhaaradham Song Lyrics In English


தேசக் காதல் பாடடீ
அது மனதின் ராகந்தானடீ
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடீ

தேசக் காதல் பாடடீ
அது மனதின் ராகந்தானடீ
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடீ

பூக்களை என் பாதை மேலே
தூவினாளே பாரடீ
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடீ

ஹாஆஅஆஅஆஅ

எந்தன் நரம்புகள் கொண்டு செய்த
வீணை ஒன்று வேண்டுமே
வீர பாரத கதைகள் எல்லாம்
எந்தன் நெஞ்சம் பாடுமே

தேசம் எந்தன் வாசம் இல்லை
சுவாசம் என்றே சொல்லடீ
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடீ


பகைவர் காதில் கூறடீ
என் எண்ணம் வாளினும் கூறடீ
எல்லை தாண்டிக் கால் பதித்தால்
என்னவாகும் பாரடீ

எந்தன் வீரம் வைரம் போலே
வானில் மின்னும் மீன்னடீ
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடீ

பாரதம் எனும் பெயரைச் சொன்னால்
என் மண்ணின் தீப்பொறி நானடீ!
என்னை நானே மறக்கிறேன்
எந்தன் குருதித் துளிகளை
என் மண்ணில் சிந்தி பிறக்கிறேன்
ஹாஆஅஆஅஆ

போரிலே நான் இறந்த நொடிகள்
இன்பம் என்றே சொல்லடீ
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடீ
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடீ
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடீ