பாய் பிரெண்டை பார்த்தால் பாடல் வரிகள்

Starring Vijay, Rambha
Movie Minsara Kanna
Music ByDeva
Lyric By Na. Muthukumar
SingersSujatha Mohan, Mano
Year 1999

Boy Friendai Paarthal Song Lyrics In English

பாய் பிரெண்டை பார்த்தால்
வரச்சொல்லு நிலவே என் நிலவே
பார்த்து ரொம்ப நாளானதே
நிலவே என் நிலவே

அவன் நடையோ தனியழகு
உடையோ தனியழகு
அப்படியோர் ஆணழகு
ஆயிரத்தில் ஓரழகு

பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான்
நிலவே சொல் நிலவே
பாவை என்னை பார்க்கவில்லையே
நிலவே கேள் நிலவே

அவள் நடித்தால் தனியழகு
துடித்தால் தனியழகு
ஊடலிலே ஓரழகு
கூடலிலே நூறழகு

பாய் பிரெண்டை பார்த்தால்
வரச்சொல்லு நிலவே என் நிலவே

உன் வாலிபம் பொல்லாதது
உன் விழியினில் தடுக்கி விழுந்துவிட்டேன்
நீ உதவ வரவில்லையே

உன் மோகனம் பொன்னானது
உனை விழுந்ததும்
எடுத்து மடியில் வைத்தேன்
நீ உனது வசம் இல்லையே

எனக்கென்றே தனியாக
ஸ்வாசங்கள் கிடையாது
இருவருக்கும் உயிர்காற்று
ஒன்றேதான் எனும்போது

இந்த உறவுகள் உடையாது
இதை உடைப்பவன் கிடையாது
இங்கு இரவுகள் ஆனால்
விரகங்கள் நமது இதயத்தை குடையாது


பாய் பிரெண்டை பார்த்தால்
வரச்சொல்லு நிலவே என் நிலவே
பாவை என்னை பார்க்கவில்லையே
நிலவே கேள் நிலவே

சந்திரோதயம் சூர்யோதயம்
உன் இருவிழி கொடுத்த இரவல்களோ
என உலகம் நினைக்கின்றதே

சந்தோஷமும் சங்கீதமும்
நீ மருவிட விளையும் அருவிகளோ
என் மனது நினைக்கின்றதே

நாம் இதுபோல் தினம்தோறும்
நனைந்தபடி இருப்போமா
நான் யாரோ நீ யாரோ
நமை நாமே மறப்போமா

உன் விரல் நகம் படும்போது
இந்த வீணைக்கு வலிக்காது
எனை தொட இனிமேல்
நீ தினசரி மீட்டு எனக்கது சலிக்காது

பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான்
நிலவே சொல் நிலவே
பாவை என்னை பார்க்கவில்லையே
நிலவே கேள் நிலவே

அவன் நடையோ தனியழகு
உடையோ தனியழகு
அப்படியோர் ஆணழகு
ஆயிரத்தில் ஓரழகு

பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான்
நிலவே சொல் நிலவே
பார்த்து ரொம்ப நாளானதே
நிலவே என் நிலவே

Boy Friendai Paarthal Song Lyrics from movie Minsara Kanna. Boy Friendai Paarthal song sung by Sujatha Mohan, Mano. Boy Friendai Paarthal Song Composed by Deva. Boy Friendai Paarthal Song Lyrics was Penned by Na. Muthukumar. Minsara Kanna movie cast Vijay, Rambha in the lead role actor and actress. Minsara Kanna movie released on 1999