Chinna Chinna Kanna

Chinna Chinna Kanna Song Lyrics In English

பாடகி : பி சுஷீலா

பாடலாசிரியர் : டி ராஜேந்தர்

சின்ன சின்ன கண்ணா சேதி சொல்லும் மன்னா உன்னில் என்னை என்னில் உன்னை காண கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண ஓடி இங்கே வாராய் ஒன்னே ஒன்னு தாராய்

சின்ன சின்ன கண்ணா சேதி சொல்லும் மன்னா உன்னில் என்னை என்னில் உன்னை காண கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண

சுட்டி பையா சுற்றி வந்தால் முத்தம் தருவேனோ எட்டி நின்றால் கட்டிக் கொள்ள என்ன செய்வேனோ

அடம் ஒன்று பிடிக்காதே தேர் வடம் என்று இழுக்காதே ஹே ஹே அடம் ஒன்று பிடிக்காதே தேர் வடம் என்று இழுக்காதே

கொடியுடல் சிலிர்த்திட கைகளில் தவழ்ந்திட சுகம் ஒன்று பிறக்காதோ கேட்டதை கொடுத்திட தருவதை வாங்கிட தடம் ஒன்றும் இருக்காதோ

சின்ன சின்ன கண்ணா சேதி சொல்லும் மன்னா உன்னில் என்னை என்னில் உன்னை காண கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண

துடிக்குது வாட்ச்சு கொதிக்குது மூச்சு வாட்டி வதைக்காதே கண்ணாம் மூச்சு கண்ணால் போச்சு ஓடி ஒளியாதே தந்தது போதாதோ நீ தவிப்பது புரியாதோ தந்தது போதாதோ நீ தவிப்பது புரியாதோ

கன்னத்தை திரிகிட கைவிரல் துடித்திட அணைத்திட வருவாயோ காற்றினில் மிதந்திடும் கவிதையை படித்திடும் பொருள் அதை உரைப்பாயோ