Chinnamma Engamma

Chinnamma Engamma Song Lyrics In English


சின்னம்மா எங்கம்மா
உண்டான சேதியெல்லாம்
தண்டோரா போட்டு நீயும் சொல்லடா
ஹே வாடிப்பட்டி கொட்டெடுத்து
வலையப்பட்டி தவிலெடுத்து
ஜாதி சனம் அறிய நீயும் சாற்றடா

தஞ்சாவூரு மேளமும் கோயம்புத்தூர் நாயனம்
ரெண்டும் ஒண்ணாச் சேரவேணும் ஊதடா
சோழவந்தான் உறுமியும் அல்லி நகர ஆட்டமும்
எட்டு ஊரும் கேட்க வேணும் கொட்டடா

ஹேய் அடிடா ஒண்ணாக
அடிடா ஒண்ணாக
அய்யனாரு சொன்னாங்க
அய்யனாரு சொன்னாங்க
சின்னம்மா உண்டானா
சின்னம்மா உண்டானா
என்ன வேணும் கேளுங்க
என்ன வேணும் கேளுங்க

அடி கொமரிங்க ஆடுங்க
கொலவைங்க போடுங்க
ஆம்பளையா பொம்பளையா
ரெண்டும் வரும் நம்பலையா
ஒச்சாயி
ஒச்சாயி

நம்ம சின்னம்மா புள்ள பெறப் போறா
அந்த புள்ள வரும் முத்துமணி தேரா
நம்ம சின்னம்மா புள்ள பெறப் போறா
அந்த புள்ள வரும் முத்துமணி தேரா

ஹேய் அடிடா ஒண்ணாக
அடிடா ஒண்ணாக
அய்யனாரு சொன்னாங்க
அய்யனாரு சொன்னாங்க

புள்ளவரம் வேணுமின்னு
நம்பி வந்த தேவியை
எட்டு தொட்டில் ஆடுதடி நம் வீட்டிலே
என்னுடைய ஆசையெல்லாம்
முத்தம் பதினாறுதான்
இன்னும் எட்டு கொறையுதய்யா என் ஏட்டிலே

இன்னும் எட்டு பொறந்து வந்தா
பள்ளிக்கூடம் தொடங்கலாம்
பஞ்சாயத்து தேர்தல் வந்தா
அப்ப நின்னு ஜெயிக்கலாம்
வீரத்தாய் நீயின்னு
பட்டம் ஒன்னு வாங்கலாம்


அடிடா ஒண்ணாக
அடிடா ஒண்ணாக
அய்யனாரு சொன்னாங்க
அய்யனாரு சொன்னாங்க
சின்னம்மா உண்டானா
சின்னம்மா உண்டானா
என்ன வேணும் கேளுங்க
என்ன வேணும் கேளுங்க

சின்ன சின்ன ஆசை வந்து
கண்ணுக்குள்ள மிதக்குது
தாலி ஒன்னு வாங்கி வச்சு நாளாகுது
சொக்கத்தங்க பதுமை ஒன்னு
சொக்கி சொக்கி அழைக்கிது
பூ முடிக்கும் தேதி எண்ணி போராடுது

மல்லிகைப்பூ தெளிச்சு வச்ச
மஞ்சம் ஒன்னு இழுக்குது
ஊதுபத்தி போல இந்த
உள் மனசு கரையுது
எதையோ நெனச்சு
இடுப்பு சேல வழுக்குது

அடிடா ஒண்ணாக
அடிடா ஒண்ணாக
அய்யனாரு சொன்னாங்க
அய்யனாரு சொன்னாங்க
சின்னம்மா உண்டானா
சின்னம்மா உண்டானா
என்ன வேணும் கேளுங்க
என்ன வேணும் கேளுங்க

அடி கொமரிங்க ஆடுங்க
கொலவைங்க போடுங்க
ஆம்பளையா பொம்பளையா
ரெண்டும் வரும் நம்பலையா
ஒச்சாயி
ஒச்சாயி

நம்ம சின்னம்மா புள்ள பெறப் போறா
அந்த புள்ள வரும் முத்துமணி தேரா
நம்ம சின்னம்மா புள்ள பெறப் போறா
அந்த புள்ள வரும் முத்துமணி தேரா