Chithira Poo Selai

Chithira Poo Selai Song Lyrics In English


சித்திரப் பூ சேலை சிவந்த முகம் சிரிப்பரும்பு முத்துச் சுடர் மேனி எழில் மூடி வரும் முழு நிலவோ மூடிவரும் முழு நிலவோ சித்திரப் பூ சேலை

மீன் கடிக்கும் மெல்லிதழை நான் கடித்தால் ஆகாதா தேனின் ருசி தெரிந்தவன் நான் தேனீயாய் மாறேனா சித்திரப் பூ சேலை

மஞ்சள் பூசும் இடமெல்லாம் என் மனம் பூசல் ஆகாதா கொஞ்சம் என்னை குங்குமமாய் குழைத்தெடுத்தால் வாரேனா சித்திரப் பூ சேலை

படிக்கட்டில் ஏறி வரும் பாதத்தெழில் பார்ப்பதற்கு படிக்கட்டின் இடையிலே ஓர் பலகையாய் மாறேனா சித்திரப் பூ சேலை


முக்காலும் துணி மறைத்து நீ மூலையிலே போய் நின்று உன் சொக்காயை இடுகையில் நான் சொக்காகி மூலைச் சுவராகி முன்னின்று பாரேனா

சித்திரப் பூ சேலை சிவந்த முகம் சிரிப்பரும்பு முத்துச் சுடர் மேனி எழில் மூடிவரும் முழு நிலவோ மூடிவரும் முழு நிலவோ சித்திரப் பூ சேலை