Chittu Pole Mottu Pole

Chittu Pole Mottu Pole Song Lyrics In English

பாடலாசிரியர்  : வாலி

ஆஅஆஆஆஆ

சிட்டுப் போலே மொட்டுப் போலே பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே சிட்டுப் போலே மொட்டுப் போலே பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே

பிள்ளை வந்தாடும் இந்த வீடு புள்ளி மான் ஆடும் முல்லைக் காடு அடி அந்த நாள் எந்த நாள் நல்ல நாள் தானடி

அஞ்சாத ஆண் பிள்ளை சிங்கம் போலே அஞ்சாறு வாரத்தில் பிறப்பான்டி அப்பாவை ஜாடையில் அச்சுப் போலே தப்பாமல் தான் கொண்டு இருப்பான்டி

தந்தைக்கு இப்போது தாளாத உல்லாசம் தந்தைக்கு இப்போது தாளாத உல்லாசம் தான் போட்ட தோட்டத்தில் பூப் பூத்த சந்தோஷம் தான் போட்ட தோட்டத்தில் பூப் பூத்த சந்தோஷம் அம்மம்மா அத்தானின் ஆனந்தம் பாரடி

சிட்டுப் போலே மொட்டுப் போலே பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே சிட்டுப் போலே மொட்டுப் போலே பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே

பல்லாண்டு வாழணும் ரெண்டு பேரும் பந்தங்கள் பாசங்கள் விலகாமல் பிள்ளைகள் நாலஞ்சு பெக்க வேணும் பெண் என்றும் ஆண் என்றும் சலிக்காமல்

எப்போதும் வீட்டுக்குள் தொட்டில்கள் ஆடட்டும் எப்போதும் வீட்டுக்குள் தொட்டில்கள் ஆடட்டும் அப்பாவும் அம்மாவும் தாலாட்டு பாடட்டும் அப்பாவும் அம்மாவும் தாலாட்டு பாடட்டும் அன்றாடம் கேட்கட்டும் ஆனந்த பைரவி

சிட்டுப் போலே மொட்டுப் போலே பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே