Devathai Puriyum Thavangal

Devathai Puriyum Thavangal Song Lyrics In English


தேவதை புரியும் தவங்கள்ம்ஹீஹீம்ம்
தேவதை புரியும் தவங்கள்
உன் பார்வைகளே என் வரங்கள்
மல்லிகை பூக்களின் மன்மத கனவுகள்
ராத்திரி முழுவதும் ரகசிய நினைவுகள்

தேவதை புரியும் தவங்கள்
உன் பார்வைகளே என் வரங்கள்

உன்னை நினைத்தால் உறக்கம் இல்லை
எந்த இரவுக்கும் என்மேல் இரக்கமில்லை
தவறியும் விழிகள் துஞ்சவில்லை
என் வசந்தங்கள் என்னை கொஞ்சவில்லை
பனியில் நனைந்தும் நெஞ்சில் ஈரமில்லை
கொடியில் புலம்பும் ஒரு காதல் முல்லை

தேவதை புரியும் தவங்கள்
உன் பார்வைகளே என் வரங்கள்
மல்லிகை பூக்களின் மன்மத கனவுகள்
ராத்திரி முழுவதும் ரகசிய நினைவுகள்


அலையில் குமிழி அலைகின்றதே
அது தரையில் வந்து கலைகின்றதே
கண்ணில் காதல் தெளிகின்றதே
காமன் கணைகள் நெஞ்சை உழுகின்றதே
இவளின் கனவில் ஒரு பூ வந்தது
இரவின் மடியில் அது தேன் சிந்துதே

தேவதை புரியும் தவங்கள்
உன் பார்வைகளே என் வரங்கள்
மல்லிகை பூக்களின் மன்மத கனவுகள்
ராத்திரி முழுவதும் ரகசிய நினைவுகள்

தேவதை புரியும் தவங்கள்
உன் பார்வைகளே என் வரங்கள்