Dhandal Edungada

Dhandal Edungada Song Lyrics In English


தண்டால் எடுங்கடா தண்ணிய விடுங்கடா
பாஸ்கி எடுங்கடா விஸ்கியை விடுங்கடா
சிங்கம் போல வாழ்ந்திருந்த எங்க வீட்டு பிள்ளை
நம்ம எம் ஜி ஆர் பெயரை எடுங்கடா
ஆயிரத்தில் ஒருவன் பாரடா
பிள்ளை போல ஆடடா துள்ளி துள்ளி ஓடடா

தண்டால் எடுங்கடா தண்ணிய விடுங்கடா
பாஸ்கி எடுங்கடா விஸ்கியை விடுங்கடா

போதை என்பது உன் வாழ்வை கொல்வது
என் தேச தொண்டை கேட்டு கொள்ளடா
வாழ்க்கை என்பது சந்தோஷம் ஆனது
உன் வாலிபத்தை சேர்த்து கொள்ளடா

வீரம் உள்ளவன் தன்மானம் உள்ளவன்
நம் நாட்டை ஆண்ட மன்னன் பாரடா
ஏழை நெஞ்சிலே எப்போதும் உள்ளவன்
போன் மேனி கொண்ட அண்ணன் தானடா
போதையில் தேடினால் பாதை இல்லை
பாதை நீ மாறினால் பயணம் இல்லை
பாட்டு பாடி ஆட்டம் ஆடு
பாட்டில் களை நீ தூக்கி போடுடா

தண்டால் எடுங்கடா தண்ணிய விடுங்கடா
பாஸ்கி எடுங்கடா விஸ்கியை விடுங்கடா
விடுங்கடா டேய் விடுங்க டா


காதல் என்பது எல்லோரும் செய்வது
கண்ணாலே பேசும் பாஷை பாரடா
ஆசை என்பது சொல்லாமல் வருவது
அன்போடு பேசி ஜோடி சேரடா

பாவை கூட்டமே இல்லாத பூமியை
செல்லாத காசு கேட்டு கொள்ளடா புரியுதா
பூவை கிள்ளியே செந்தேனை அள்ளியே
உன் தாகம் யாவும் தீர்த்து கொள்ளடா
பெண்களை அன்பிலே கொஞ்ச வேண்டும்
மிஞ்சினால் அப்பவே கெஞ்ச வேண்டும்
கண்ணடிக்க அழகு வேண்டும்
காதலிக்க வீரம் வேண்டும்

தண்டால் எடுங்கடா தண்ணிய விடுங்கடா
பாஸ்கி எடுங்கடா விஸ்கியை விடுங்கடா
சிங்கம் போல வாழ்ந்திருந்த எங்க வீட்டு பிள்ளை
நம்ம எம் ஜி ஆர் பெயரை எடுங்கடா
ஆயிரத்தில் ஒருவன் பாரடா
பிள்ளை போல ஆடடா துள்ளி துள்ளி ஓடடா

தண்டால் எடுங்கடா எடுடா
தண்ணிய விடுங்கடா வேணான்டா
பாஸ்கி எடுங்கடா எடு 1 2 3 4
விஸ்கியை விடுங்கடா அட விடு டா டேய் விடு