Eedaa Eedaa

Eedaa Eedaa Song Lyrics In English


நானி என் பேரு
நான் குட்டி ஈ தான் பாரு
அணு குண்டு போடும்
வண்டு நானு தொடங்கிடுச்சு
போரு

உன் கோட்டைக்குள்ள
வாறேன் உன்னை
வேட்டையாடப் போறேன்
உன் கண்ணுக்குள்ள கைய
விட்டு ஆட்டிப்பாக்க போறேன்

ஈ டா ஈ டா ஈ டா
கண்ணு ரெண்டில் தீடா
நரகம் உந்தன் வீடா
மாத்திடுவேன் வா டா

பொறி என்ன
செய்யும் காட்டுக்குள்ள
விட்டா ஒட்டுமொத்தம்
சுட்டெரிச்சு சாம்பலாக்கிடாதா

துளி என்ன செய்யும்
தொண்டைக்குள்ள விட்டா
மண்டைக்குள்ள நஞ்ச ஏத்தி
உன்னை சாய்ச்சிடாதா



ஈன்னு என்ன
பாத்தான் என்ன பூச்சியில
சேத்தான் அங்க தான அவன்
தோத்தான் நான் மூச்சுக்குள்ள
நச்சு பாய்ச்ச வந்திருக்கும் சாத்தான்


ஈ டா ஈ டா ஈ டா
கண்ணு ரெண்டில் தீடா
நரகம் உந்தன் வீடா
மாத்திடுவேன் வா டா

நான் உடனடியா
செஞ்சு முடிக்க பத்து
விஷயம் கிடக்குது
டுடூ டுடூ டுடூ டுடூ
ஒன் உன்ன கொல்லனும்
டூ உன்ன கொல்லனும்
த்ரீ உன்ன கொல்லனும்
ஃபோா் உன்ன கொல்லனும்
பைவ் உன்ன கொல்லனும்
சிக்ஸ் உன்ன கொல்லனும்
செவன் உன்ன கொல்லனும்
எயிட் உன்ன கொல்லனும்
நைன் உன்ன கொல்லனும்
டென் உன்ன கதற கதற
பதற பதற சிதற சிதற சிதற
சிதற வெட்டி வெட்டி வெட்டி
கொல்லனும்

ரெக்க ரெக்க
ரெக்க ரெக்க ரெண்டின்
ராகம் கேக்குதா உன்
செவியோரம் மரண ஓலம்
எட்டிப் பாக்குதா ஈயோட
காலு கூட ஈட்டி போல மாறும்
உன கொன்னு தீத்த பின்ன தான்
என் கொலவெறியும் தீரும்

செத்துப் பொழச்சு
எமன பாத்து சிரிச்சவன்
நானி நெய்யு மேல
மொய்க்க ஈயா நானு
இல்ல உன் நெஞ்சில்
முள்ள தைக்க பேயா
வந்த தொல்ல உன்
எல்லைக்குள்ள உன்ன
கொல்ல அவதரிச்ச வில்லன்

ஈ டா ஈ டா ஈ டா
கண்ணு ரெண்டில் தீடா
நரகம் உந்தன் வீடா
மாத்திடுவேன் வா டா