En Anbae (Tum Hi Hoo)

En Anbae (Tum Hi Hoo) Song Lyrics In English


என் அன்பே எந்தன் ஆருயிரே
நீ இல்லாத வாழ்வும் வெறுமை யடி
என் அன்பே எந்தன் ஆருயிரே
நீ இல்லாத வாழ்வும் வெறுமை யடி

உன் கார் குழலும்
அந்த மழை துளியும்
என்னை தழுவிடும் போது
உந்தன் ஞாபகமே

விழி மூடினால்
நீயும் வருகிறாய்
விழி திறக்கையில்
ஏனோ மறைகிறாய்

பிரிவினால் நம்மை அறிகிறோம்
அறிவதால் மீண்டும் இணைகிறோம்

ஒரு கணநேரமே
நம் பிரிவையும் இங்கே
ஒரு யுகமாகவே கழிக்கின்றேன்
என் கண்களில் வழியும்
நீர்த்துளியில் ஓர் துளி துளியாய்
உன்னை காண்கிறேன்

நீ இல்லை என்றால்
நானும் இல்லை இங்கே
என் சுவாசமும் நீதானே

விழி மூடினால்
நீயும் வருகிறாய்
விழி திறக்கையில்
ஏனோ மறைகிறாய்

பிரிவினால் நம்மை அறிகிறோம்
அறிவதால் மீண்டும் இணைகிறோம்


என் அன்பே
என் அன்பே

உன் பாடலில்
என்னை மறந்தேன்
அன்பே உந்தன்
வழி நடந்தேன்

வீணையின் நாதம் போல்
நானும் உனக்கு
சங்கதி இல்லாத
சங்கீதம் எதற்கு

இனி உனது விழி
அது எனது வழி
நாம் இருவரும்
ஒருவர் அன்றோஓ

விழி மூடினால்
நீயும் வருகிறாய்
விழி திறக்கையில்
ஏனோ மறைகிறாய்

பிரிவினால் நம்மை அறிகிறோம்
அறிவதால் மீண்டும் இணைகிறோம்

நீயன்றோ இனி நீயன்றோ
என் வாழ்கையும் இனி நீயன்றோ
நீயன்றோ இனி நீயன்றோ
என் சுவாசமும் இனி நீயன்றோ