En Anbe En Anbe

En Anbe En Anbe Song Lyrics In English



விஷ்லிங் :

என் அன்பே என்
அன்பே என் கண்ணுக்குள்
கவிதாஞ்சலி என் அன்பே
என் அன்பே என் நெஞ்சுக்குள்
காதல் வலி

என் உடல் இன்று
கடல் ஆனதே என்
உயிருக்குள் அலையாடுதே
இந்த பாறைக்குள் பனி
பாய்ந்ததே என் விரதத்தில்
விளையாடுதே

ஓ சகி ஓ சகி
பிாியசகி பிாியசகி

என் அன்பே என்
அன்பே என் கண்ணுக்குள்
கவிதாஞ்சலி என் அன்பே
என் அன்பே என் நெஞ்சுக்குள்
காதல் வலி

விழி பட்ட இடம்
இன்று உளி பட்ட சிலையாக
இதுதானோ காதல் என்று
அறிந்தேனடி புது பாா்வை
நீ பாா்த்து புது வாா்த்தை
நீ பேசி இதயத்தை இடம்
மாற செய்தாயடி

மெல்லிடை கொண்டு
நடைகள் போடும் அழகான
பெண்ணே முப்படை கொண்டு
எனை சுற்றி வளைத்தாயடி
என் உறக்கத்தை திருடி சென்று
உறவாடும் பூவே உன் சிாிப்புக்குள்
சிறை வைக்கிறாய்


அட கொஞ்சம்
கொஞ்சமாய் என்னை
வாட்டினாய் கொஞ்சம்
கொஞ்சமாய் என்னை
மாற்றினாய் இதயத்தின்
மறுபக்கம் நீ காட்டினாய்

இனி என்ன
சொல்லுவேன் இன்று
நான் அமுத நஞ்சையும்
உண்டு இனி ரெக்கை
இன்றியே நான் போவேன்
வான் மீதிலே

ஓ சகி ஓ சகி
பிாியசகி பிாியசகி

என் அன்பே என்
அன்பே என் கண்ணுக்குள்
கவிதாஞ்சலி என் அன்பே
என் அன்பே என் நெஞ்சுக்குள்
காதல் வலி

ஓ சகி ஓ சகி
பிாியசகி பிாியசகி