En Peyare Enakku Marandhu

En Peyare Enakku Marandhu Song Lyrics In English


அனாமிகா அனாமிகா அனாமிகா
என் பெயரே எனக்கு மறந்து போன
வனாந்தரத்தில் என்னை பெயர் சொல்லி
அழைத்தது யார் நீயா நீயா

என்னை ஒரு மின்னல் கீற்று
என்றல்லவா நினைத்திருந்தேன்
நீ எப்படி அதில் நிரந்தரப் பாய் முடைந்தாய்
லாலாலலலலலலலால்ல்லா

எனது யாத்ரையில் எல்லா மனிதர்களும்
எல்லை கற்களாய் இருக்க
நீ மட்டும் எனக்கு பாதை ஆகினாய் எப்படி

பருவ காலங்களால் புஷ்ட்டிக்காத
என் தோட்டங்கள்
உன் பார்வைகளால் புஷ்ட்டித்ததே

தீ விழுந்தாலும் உருகாத என் நெஞ்சு
ஒரு பூ விழுந்த போது உருகியதே
லாலாலலலலலலலால்ல்லாஆஆஆஆ

இந்த காதல் மேகம்தான்
மனமென்னும் எரிமலையை
மழை சிந்தி மழை சிந்தி அதில்
உல்லாச வனங்களை உற்பத்தி செய்யும்


இதய ரோஜாச் செடியில்
இந்த ஒற்றைப் பூ பூத்துவிட்டால்
அத்தனை முட்களும் உதிர்ந்து போகின்றன

வாலிபம் ஏந்தி பார்க்கும் திருவோடும் இதுதான்
வாலிபம் சூடி பார்க்கும் கிரீடமும் இதுதான்
லாலாலலல லலலலால்ல்லாலாலாலாலா

முதலில் சப்தங்களுக்கு
அர்த்தம் சரியாய் விலகவில்லை
இப்போதோ மௌனத்திற்கும் கூட
உரை எழுத முடிகிறது

என் கண்கள் உன்னிடம் காதல் பிச்சை
கேட்கும் அமுதசுரபிகள்
அமுதசுரபிகள் பட்டினி கிடக்கலாமா
உன் பார்வையை பிச்சையிடுபிச்சையிடு
லாலாலலலலலலலால்ல்லா