En Vaan Vera

En Vaan Vera Song Lyrics In English


ஏ உன் விழிகளால்
மின்னும் உலகைப் பார் நீ
உண்மை பேசு என்றுந்தன் நெஞ்சை
இன்று கேளு நீ

கண்கள் நீ திறந்தால்
உந்தன் பார்வையாய் ஆவேன்
முன் பின் காணா சிரிப்பில்
இந்த மாயப் பாயின் மேல்

என் வான் வேறாஆ
வேறாரும் காணா கோணத்தில்
நில் என்று சொல்லவோகேட்கவோ
ஓ யாரும் இங்கே இல்லை

என் வான் வேறா
நான் காணா பூமி மீதிலே
மேகம் என்றாகின்றேன் நான் செல்கிறேன்
ஏ உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்
உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்

ஏதும் பொய்யும் இல்லை
இருவர் : உண்மை போலவும் இல்லை
சீறிப் பாய்ந்தே விரைந்தே
என்னைத் தேடிப் போகிறேன்
என் வான் வேறாஆ


கோடி கண் கொண்டு பார்
ஒரு கோடி கண்கள் போதுமா
கண்கள் மூடாமல் நீ பார்
வான் மீனைப் போலவே
நான் வீழ்கிறேன்
ஏ உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்
என் வான் வேறா
உன் உள்ளம் போலே தூய்மையோ
அலை போல இன்பம்
அதன் மேலே என் ஆசை

இருவர் : ஆழி செல் மீனைப் போல்
நான் பாய்கிறேன்
உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்
என் வான் வேறாய்
என் வான் வேறாய்
ஒன்றானோமே
ஒன்றானோமே

இக் காற்றைக் கேள்
நான் உந்தன் மேல்
இருவர் : வாராய் அன்பே