Engirundho Vandhaan |
|---|
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் பிருந்தா சிவகுமார்
பாடலாசிரியர் : மஹாகவி பாரதியார் மற்றும் மோகன் ராஜன்
கண்ணே தங்கமே வாராய் ஆஆஆ
எங்கிருந்தோ வந்தான் எனதுயிரே இங்கிவனை யான் பெற என்ன தவம் செய்தேன்
எங்கிருந்தோ வந்தான் எனதுயிரே இங்கிவனை யான் பெற என்ன தவம் செய்தேன்
சொன்னபடி கேட்பான் துணி மணிகள் காத்திடுவான் ஆட்டங்கள் காட்டி அலுக்காமல் செய்திடுவான்
வாலாட்டும் சேய் நீயே தாலாட்டும் என் தாய் நீயே உன் நன்றி அறிவேனே உனை ஒன்றி நான் வாழ்வேனே
மொழியில்லா உன் பேச்சில் எனை நானும் மறப்பேனே நீ பேசும் அன்பாலே என் உலகம் புதிதாகும் ஓஓஓஓஓ
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் நண்பனாய் நல்லாசிரியனுமாய்
எங்கிருந்தோ வந்தான் எனதுயிரே கண்ணை இமை இரண்டும் காப்பது போல் எப்போதும் உனை நான் காத்திருப்பேன் காத்திருப்பேன் காத்திருப்பேன் காத்திருப்பேன் ஏ
கண்ணே தங்கமே வாராய் ஆஆஆ
