Engum Vivasaya Sangam

Engum Vivasaya Sangam Song Lyrics In English




எங்கும் விவசாய சங்கம் அமைத்ததில் அங்கம் வகித்திடுவோம் எங்கும் விவசாய சங்கம் அமைத்ததில் அங்கம் வகித்திடுவோம்

இந்தத் தங்க முயற்சிக்குப் பங்கம் விளைத்திடும் தன்மையை வெட்டி மிதித்திடுவோம் இந்தத் தங்க முயற்சிக்குப் பங்கம் விளைத்திடும் தன்மையை வெட்டி மிதித்திடுவோம்

எங்கும் விவசாய சங்கம் அமைத்ததில் அங்கம் வகித்திடுவோம் இந்தத் தங்க முயற்சிக்குப் பங்கம் விளைத்திடும் தன்மையை வெட்டி மிதித்திடுவோம்



இரவு பகல் நின்று காடு திருத்திய கைகள் உயர்த்திடுவோம் இரவு பகல் நின்று காடு திருத்திய கைகள் உயர்த்திடுவோம்

என்றும் எங்கள் உழைப்பினை எங்களுக்கே என எக்காளம் ஊதிக் கிளப்பிடுவோம் என்றும் எங்கள் உழைப்பினை எங்களுக்கே என எக்காளம் ஊதிக் கிளப்பிடுவோம்

எங்கும் விவசாய சங்கம் அமைத்ததில் அங்கம் வகித்திடுவோம் இந்த தங்க முயற்சிக்கு பங்கம் விளைத்திடும் தன்மையை வெட்டி மிதித்திடுவோம்



கைப்பு நிலத்தையும் செப்பனிட்டுப் பயிர் காத்துக் கதிர் வளர்த்தோர் கைப்பு நிலத்தையும் செப்பனிட்டுப் பயிர் காத்துக் கதிர் வளர்த்தோர்


அதன் கண்ட பலனைப் பறிகொடுத்து நின்று கண்ணீர் வடிப்பதை இனி சகியோம் அதன் கண்ட பலனைப் பறிகொடுத்து நின்று கண்ணீர் வடிப்பதை இனி சகியோம்

எங்கும் விவசாய சங்கம் அமைத்ததில் அங்கம் வகித்திடுவோம் இந்த தங்க முயற்சிக்கு பங்கம் விளைத்திடும் தன்மையை வெட்டி மிதித்திடுவோம்



கண் கெட்டுப் போனதோ இன்னும் சகிப்பதேன் துன்புற்ற தோழர்களே கண் கெட்டுப் போனதோ இன்னும் சகிப்பதேன் துன்புற்ற தோழர்களே

துள்ளி மின்வெட்டு போலே பளிச்சென்று வாருங்கள் மேதினிக் குண்மை விளக்கிடுவோம் துள்ளி மின்வெட்டு போலே பளிச்சென்று வாருங்கள் மேதினிக் குண்மை விளக்கிடுவோம்

எங்கும் விவசாய சங்கம் அமைத்ததில் அங்கம் வகித்திடுவோம் இந்த தங்க முயற்சிக்கு பங்கம் விளைத்திடும் தன்மையை வெட்டி மிதித்திடுவோம்

எங்கும் விவசாய சங்கம் அமைத்ததில் அங்கம் வகித்திடுவோம் இந்த தங்க முயற்சிக்கு பங்கம் விளைத்திடும் தன்மையை வெட்டி மிதித்திடுவோம்

இந்த தங்க முயற்சிக்கு பங்கம் விளைத்திடும் தன்மையை வெட்டி மிதித்திடுவோம்