Ennadi Unga Nagarigam

Ennadi Unga Nagarigam Song Lyrics In English


என்னடி உங்க நாகரீகம் எதையும் திறந்து போடுது இலை மறைவின்றி ஆடுது இலைமறைவின்றி ஆடுது

அடி என்னடி உங்கள் பழமைப் பண்பு தலையும் காலும் மூடுது உடல் சாக்கு மூட்டைப்போல் தோணுது பார்ப்பவர்க்கெல்லாம் ஆசையை மூட்டுது பத்தாம் பசலி பத்தினிக் குணமே பழமைப் பாடமடி

என்னடி உங்க நாகரீகம் எதையும் திறந்து போடுது இலை மறைவின்றி ஆடுது இலைமறைவின்றி ஆடுது

கணவன் உயிராய் கட்டில் சிலையாய் வாழ்வது பழமையடி கணவனைப்போலே மனைவிக்கும் உரிமை நாகரீகமடி படித்த போதும் பெண்களின் கடமை பதியின் சேவையடி பதியின் சேவை மனைவிக்கும் வேண்டும் அதுதான் வாழ்க்கையடி


என்னடி உங்க நாகரீகம் எதையும் திறந்து போடுது இலை மறைவின்றி ஆடுது இலைமறைவின்றி ஆடுது

கோவில் சிலைகள் வெளியில் விழுந்தால் கல்லாய் மாறுமடி குடும்பப் பெண்கள் நாணம் இழந்தால் மானம் போகுமடி

காவல் போட்டு சிறையில் வைப்பது அடிமை வாழ்க்கையடி கற்பையும் காத்து உரிமையையும் காப்பது நாகரீகமடி