Enni Sollava

Enni Sollava Song Lyrics In English


எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு

ஆஹ் ஆஹ் ஆஆ எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு

கூந்தல் மேகங்கள் பூப்பந்தல் போட ஓடம் போல் நீயும் ஊஞ்சல் ஆட கூந்தல் மேகங்கள் பூப்பந்தல் போட ஓடம் போல் நீயும் ஊஞ்சல் ஆட

மோகம் தாளாமல் நானே மாற என்னை பாராட்டு நான் ஏமாற

எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு

ஆஹ் ஆஹ் ஆஆ

வானில் தீபங்கள் இல்லாத போதும் பாவை என் கண்ணில் தீபம் போதும் வானில் தீபங்கள் இல்லாத போதும் பாவை என் கண்ணில் தீபம் போதும்


காதல் யாகங்கள் செய்கின்ற போதும் தேகம் உண்டாக்கும் தீயே போதும்

எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு

பூக்கள் தாலாட்டும் பொன்னான பாவை என்னை சூடாக்கும் ஈரப்பார்வை பாதி கண் கொண்டு பார்த்தாள் பூவை உந்தன் நோய் தீர ஏதோ தேவை

எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு

இருவர் : ஆஹ் ஆஹ் ஆஆ