Ennodu Kadhal Endru

Ennodu Kadhal Endru Song Lyrics In English


என்னோடு
காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா
ஊரெங்கும்
வதந்தி காற்று வீச வைத்தது
நானா இல்லை நீயா

உன்னோடு லவ் என்று
ஊர் சொன்னது
நீ வேறு நான் வேறு
யார் சொன்னது
ஆஹ் என்னோடு
காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா



என் சட்டை பட்டனோடு
கூந்தல் முடியை சிக்க வைத்து
ஹய்யோ விடுடா என்றால்

நோ நோ நோ நோ
என் கண்ணில் தூசி கண்டு
ஊதும் சாக்கில் ஒட்டி நின்று
மனசை குப்பை செய்தாய்

சீ சீ சீ சீ
கண்ணை ஊதும் வேளை பார்த்து
வாயை ஊதி விட்டதாரு
நீயா இல்லை நானா ஹும்

சரி வளைக்க முயன்றது யாரு
யாரு
நீயா நானா
வளைந்து கொடுத்தது யாரு
யாரு
நீயா நானா

நான் வந்து
நீயோடு ஒன்றானது
ஹஹ நாம் என்ற சொல்
ஒன்று உண்டானது
ஆண்டவாஎன்னோடு
காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா

நம் ஹோட்டல் மாடி அறைக்கு
நடந்து செல்வோம் என்ற போது
லிஃப்ட்டில் செல்வோம் என்றாய்


நோ நோ நோ நோ நோ நோ
பெண்ணே நம் லிஃப்ட்டுகுள்ளே
நீள அகலம் நிறைய இருந்தும்
என்னை இடித்து நின்றாய்

சீ சீ சீச்சி சீ சிச்சி சீ
லிஃப்ட்டின் கதவு திறந்த பிறகும்
லிஃப்பை மூடி கிடந்ததாரு
நீயா இல்லை நானா

ஒட்டி வந்தது யாரு
யாரு யாரு
நீயா நானா
ஒத்துழைத்தது யாரு
யாரு
நீயா நானா

உன்னோடு லவ்
என்று ஊர் சொன்னது
நீ வேறு நான் வேறு
யார் சொன்னது
என்னோடு
காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா

ஏய் ஊரெங்கும்
வதந்தி காற்று வீச வைத்தது
நானா இல்லை நீயா

உன்னோடு லவ் என்று
ஊர் சொன்னது
நீ வேறு நான் வேறு
யார் சொன்னது

என்னோடு
காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா