Enthan Kural Kettu |
|---|
எந்தன் குரல் கேட்டு
உனை தூக்கம் தழுவாதா
எந்தன் குரல் கேட்டு
உனை தூக்கம் தழுவாதா
பந்தம் நான் இல்லை
பரிதாபம் கூடாதா
நண்பனே நண்பனே நண்பனே
இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா
இதை யாரிடம் சொல்லுவேன்
நண்பனே நண்பனே நண்பனே
எந்தன் குரல் கேட்டு
உனை தூக்கம் தழுவாத
பந்தம் நான் இல்லை
பரிதாபம் கூடாதா
இரவென்றும் பகல் என்றும்
உனக்கில்லையே
இளங்காலை பொன்மாலை உனக்கில்லையே
மதுவென்னும் தவறுக்கு ஆளாகினாய்
அதற்காக நியாயங்கள் நீ தேடினாய்
ஆயிரம் பூக்களில்
ஆனந்தம் காண்கிறாய்
நிறங்களே வேற்றுமை
நினைத்திடு நண்பனே
மது கிண்ணம்தனை எடுத்து
பெண்ணை விலை கொடுத்து விழி மூடுமா
எந்தன் குரல் கேட்டு
உனை தூக்கம் தழுவாதா
பந்தம் நான் இல்லை
பரிதாபம் கூடாதா
வரவின்றி செலவானால்
தவறில்லையே
வாழ் நாட்கள் செலவானால் வரவில்லையே
நேற்றோடும் இன்றோடும் நீ இல்லையே
நாளை உன் கையோடு உனக்கில்லையே
யாரிடம் தவறில்லை
யாரிடம் குறை இல்லை
தூக்கமே நிம்மதி
தூங்கிடு நண்பனே
நீ கடந்த காலங்களை
கலைந்து எறிந்து விடு விழி மூடுமே
எந்தன் குரல் கேட்டு
உனை தூக்கம் தழுவாதா
பந்தம் நான் இல்லை
பரிதாபம் கூடாதா
நண்பனே நண்பனே நண்பனே
இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா
இதை யாரிடம் சொல்லுவேன்
நண்பனே நண்பனே நண்பனே
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்
