Ethilum Ingu

Ethilum Ingu Song Lyrics In English


ஆஆஹாஆஆஅ
ஆஅஆஅஆஆஅ

எதிலும் இங்கு இருப்பான்
அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி

எதிலும் இங்கு இருப்பான்
அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ

வரிப்புலி அதழ்
தரித்தவன்
எழில் கண்டேன்
பிறப்பெனும் பிணி அறுப்பவன்
துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம்
தரத் திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனைத் தர தகும் நெறி
வகுத்திட துணை வேண்டும்

ஆலம் கரு நீலம்
என தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன்
எனும் அடியார்க்கொரு தொண்டன்

பற்றுத் தலைக்கு நெருப்பவன்
ஒற்றை கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து

எதிலும் இங்கு இருப்பான்
அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ


தொடக்கமும் அதன்
அடக்கமும் அவன் வேலை
நடப்பதும் அதை
தடுப்பதும் அவன் லீலை
உடுக்களில் சரம் தொடுத்தவன்
தலை முடிக்கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதை
கழித்தலும் அவன் பாடம்

மாறும் யுகம் தோறும் அவன்
கணக்கின் படியாகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன்
ஒரு கைப்பிடியாகும்

சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
முற்றப் படித்து முடித்த ஒருத்தன்

எதிலும் இங்கு இருப்பான்
அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி

எதிலும் இங்கு இருப்பான்
அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ