Ezhu Thalaimuraiyin

Ezhu Thalaimuraiyin Song Lyrics In English


ஏழு தலைமுறையின் முன்பிருந்ததொரு
எங்கள் வம்ச மகன் நட்ட வேல்

ஏழு தலைமுறையின் முன்பிருந்ததொரு
எங்கள் வம்ச மகன் நட்ட வேல்

எந்த நாளினிலும் குற்றவாளிகளைக்
கொன்று தீர்த்து விடக் கற்ற வேல்

பகைவர் அஞ்ச வரும் குருதி கொஞ்ச வரும்
பழியை வாங்க வரும் வீர வேல்

பாவம் செய்பவருக்கு பாடமாக வரும்
பக்தி தேவைதையின் சக்திவேல்

பந்த பாசங்களை எந்த நாளினிலும்
பார்ப்பதில்லை இந்த வெற்றிவேல்
பந்த பாசங்களை எந்த நாளினிலும்
பார்ப்பதில்லை இந்த வெற்றிவேல்
இந்த பூமி விட்டு வந்தபோது உயிர்
வாங்கித்தான் பதியும் இந்த வேல்
இந்த பூமி விட்டு வந்தபோது உயிர்
வாங்கித்தான் பதியும் இந்த வேல்

மாரியாத்தா சந்நிதியில்
வேலெடுத்து நட்டு வச்ச
காரணத்தை சொல்றேன் கேளடா
அட மானமுள்ள அத்தியப்பன்
ஆன பழி தீர்த்துவிட்டு
தானெடுத்து நட்ட வேலடா

நாச்சி முத்துக் கவுண்டரு
கட்டி வந்த பொண்டாட்டி
நல்லவளொருத்தி இருந்தா

அவள் உள்ளபடி தானிருக்க
ஒன்பது பேர் வைப்பாட்டி
ஊருக்குள்ளே கூட இருந்தாள்

உத்தம பத்தினியாள்
சத்தியம் தவறாமல்
ஒத்தப்பிள்ளை பெத்து இருந்தா
அந்த பச்ச பிள்ளை முன்னிலையில்
பத்தினியை நாச்சி முத்து
நித்தமும் போட்டு ஒதைச்சான்

தாய் வடித்த கண்ணீரைத்
தான் பார்த்த பிள்ளைக்கு
வாய்ப்பேச்சு நின்னதேயடா
பிள்ளை வாயிழந்து போனாலும்
பால் குடித்த நெஞ்சுக்குள்ளே
வஞ்சம் ஒன்னு வந்ததேயடா


வெள்ளாட்டி முன்னிலையில்
வெள்ளாடு போல அவள்
வேதனையும் கொஞ்சமல்லடா
அந்த வேதனையைப் பார்த்த பிள்ளை
தானழுத கண்ணீரு
காவிரியை மிஞ்சுமடா
காவிரியை மிஞ்சுமடா

வண்ணமுள்ள பெண்ணொருத்தி
வஞ்சகனுக்கு வாய்த்து விட்டாள்
பின்னுமவன் போன கதை பெரிசாச்சு
அந்த பேரழகி சொன்னதுதான் செயலாச்சு

பட்டத்து ராணியை நீ
பல்லக்கில் அனுப்பிவிட்டால்
பக்கத்தில் நானிருப்பேன் என்றாளே
அந்தப் பாதகன் மனைவிதனைக் கொன்றானே
பாதகன் மனைவிதனைக் கொன்றானே

அப்பாவின் செயல் பார்த்தான்
அம்மாவின் கொலை பார்த்தான்
அப்போது சீறி வந்தான் ஊமையடா
அம்மாஅம்மாஅம்மா
பேசி அம்மாவென்றே துடித்தான்
பிள்ளையடா

கண்ணிலே நெருப்பெடுத்த
வண்ண மகன்தான் பார்த்து
பெண்ணரசி தானழைத்தாள் அன்பிலே
தன் பேச்சினால் அடக்கி விட்டாள் முடிவிலே
பேச்சினால் அடக்கி விட்டாள் முடிவிலே

கட்டுப்பட்ட அந்த மகன்
காத்திருந்தானடா
அந்த காலம் வரும் நேரம் வரை
பார்த்திருந்தானடா
தட்டிக் கேட்ட தந்தையவன் பங்காளியானான்
மகன் தாயுரைத்த வாக்கின்படி பகையாளியானான்

ஹஹஹஹா ஹஹஹஹா
என்னைக்கு உன்னோட அட்டூழியமும் அக்கிரமமும்
எல்லையை மீறி இந்த கிராமத்தையே பாதிக்குதோ
அன்னிக்கே நீ என் அப்பன் இல்ல பங்காளி
உன்ன தீத்து கட்ட உத்தரவ கொடுத்துட்டா எங்கம்மா

நாளைக்கு ஊரையே பகைச்சுகிட்டு
நீ கல்லு கடை தெறக்க போற
எங்க ஆதா சொன்ன நீரம் வந்துருச்சு

ஆறுபடை வேலன் என ஆடி வருகின்றான்
சூர வந்தான் மேனிதனில் பாய வருகின்றான்
தந்தையென பிள்ளையென பாசம் இனியில்லை
சந்ததியில் இந்த வடிவேல் உரைக்கும் எல்லை