Gayathiri Ketkum

Gayathiri Ketkum Song Lyrics In English


காயத்திரி கேட்கும்
ஒரு மாயத்திரை விலகும்
இது பொன் மாலை அடியோ
தூண்டத் திரி எரியும்
அதில் காதல் ஒளி தெரியும்
இது யார் வேலை அடியோ

வாரத்தில் ஒரு நாள்
உன்னால் விரதம்
வாலிபம் வந்து வந்து
வாட்டுதடியோ

காயத்திரி கேட்கும்
ஒரு மாயத்திரை விலகும்
இது பொன் மாலையடியோ
தூண்டத் திரி எரியும்
அதில் காதல் ஒளி தெரியும்
இது யார் வேலையடியோ

ஆனந்தூரி அழகுத் தூரி
ஆடும் தேவதை யார் மகளோ
மேகத்தூரி என்னைத் தானே
பாடும் மன்மதன் யார் இவனோ

மின்னலிலே வகிடெடுத்த
பொன் உருவம் இதுவோ
பின்னலுக்கு மின்மினியை
சூடி வரும் அழகோ

கந்தர்வ ராகம்
கேட்கின்ற நேரம்
ஆனந்தம் அம்மம்மா

காயத்திரி கேட்கும்
ஒரு மாயத்திரை விலகும்
இது பொன் மாலை அடியோ
தூண்டத் திரி எரியும்
அதில் காதல் ஒளி தெரியும்
இது யார் வேலை அடியோ

வாரத்தில் ஒரு நாள்
உன்னால் விரதம்
வாலிபம் வந்து வந்து
வாட்டுதடியோ


காயத்திரி கேட்கும்
ஒரு மாயத்திரை விலகும்
இது பொன் மாலை அடியோ

வானில் தோன்றும்
வர்ண ஜாலம்
எந்த ஓவியன் தீட்டியதோ
வானம்பாடி பாடும் பாடல்
எந்தப் பைங்கிளி சொல்லியதோ

சூரியனின் சந்ததியில்
வந்தவன் தான் இவனோ
வெண்ணிலவின் கை பிடிக்க
சம்மதம் தந்தவனோ
வையகம் யாவும்
வாழ்ந்திடும் காலம்
ஆனந்தம் அம்மம்மா

காயத்திரி கேட்கும்
ஒரு மாயத்திரை விலகும்
இது பொன் மாலை அடியோ
தூண்டத் திரி எரியும்
அதில் காதல் ஒளி தெரியும்
இது யார் வேலை அடியோ

வாரத்தில் ஒரு நாள்
உன்னால் விரதம்
வாலிபம் வந்து வந்து
வாட்டுதடியோ

காயத்திரி கேட்கும்
ஒரு மாயத்திரை விலகும்
இது பொன் மாலை அடியோ
தூண்டத் திரி எரியும்
அதில் காதல் ஒளி தெரியும்
இது யார் வேலை அடியோ