Hold Me Now |
|---|
போதும்டி உன் மின்னல்
தட்டி தரைசாயுதே
பேசி அந்த வாழ்த்து போதும்
நான் வாழுறேன்
கிட்ட வா உன் கண்ணும் பட்டு
கொஞ்சம் தேயுறேன்
மாயமா வந்து வீசும் காத்தில்
அலை பாயுறேன்
கோபமா நான் கெஞ்சுறேன்
சிரிக்க சொல்ல உன்ன கொஞ்சுறேன்
மிரட்டுடி ஒரு கொழந்தையா
நான் அஞ்சுறேன்
காய்ச்சலா கை கோர்க்குறேன்
கண்ணு முழிச்சு உன்னை பாக்குறேன்
உயிர் கொடுத்து தான் உனக்காக
நான் கை தூக்குறேன்
மேல மேல மேல பறக்குறேன்
உன் காதல் பட்டதால்
நெஞ்சம் குதிக்குதே
கீழ கீழ கீழ தொலையுறேன்
உன் கண்ணில் விழுந்ததால்
ஹோல்டு மீ நவ்
ஹோல்டு மீ லிட்டில் குளோசர்
ஹோல்டு மீ நவ்
ஹோல்டு மீ லிட்டில் குளோசர்
என்னடா நீ என்ன பண்ணி
நான் மாறுறேன்
சொல்லடா நான் என்னை தாண்டி
எங்க போகுறேன்
செல்லமாய் வந்து
தொல்லையோடு விளையாடுற
தூக்கிட்டு என் எல்லையோடு
தான் வாழுற
மடியில் நான் ஒட்டி தூங்குறேன்
மழைய கொட்டி கொடை தாங்குற
நெருங்கி நீ வந்து நடக்கவே
நான் ஏங்குறேன்
ரசிக்க தான் கொஞ்சம் நீங்குறேன்
சின்ன முத்தம் கூட வாங்குறேன்
அதிசயம் ஒன்னு கிடைக்க தான்
உன்னை தாங்குறேன்
மேல மேல மேல பறக்குறேன்
உன் காதல் பட்டதால்
நெஞ்சம் குதிக்குதே
கால கால கால மறக்குறேன்
நீ காத்தில் விட்டதால்
ஹோல்டு மீ நவ்
ஹோல்டு மீ லிட்டில் குளோசர்
ஹோல்டு மீ நவ்
ஹோல்டு மீ லிட்டில் குளோசர்
ஓஹுஓ ஓஓஓஓ
மேல மேல மேல பறக்குறேன்
உன் காதல் பட்டதால்
நெஞ்சம் குதிக்குதே
கால கால கால மறக்குறேன்
நீ காத்தில் விட்டதால்
மேல மேல மேல பறக்குறேன்
உன் காதல் பட்டதால்
நெஞ்சம் குதிக்குதே
கீழ கீழ கீழ தொலையுறேன்
உன் கண்ணில் விழுந்ததால்
