Idhu Enna Idhu Enna |
---|
இது என்ன இது என்ன புதிதாய் ஒரு வலி என்ன புரியாமல் அலை பாயும் மனம் மீள வழி என்ன
நீ அருகே அருகே இருந்தாய் வெறும் தொல்லை என்று நினைத்தேன் நீ தொலைவில் எங்கோ போனதும் உன் நினைவில் நான் தொலைந்தேன்
ஒரு பிம்பம் போல் நீ இருந்தாய் வெறும் கல்லாய் நானும் கிடந்தேன் வெறும் கானல் நீராய் மறைந்தாய் இன்று காற்றில் நான் கரைந்தேன்

என் சாலை எங்கெங்கும் மௌனங்கள் தெரிகிறதே என் தோட்டம் இன்றேனோ பூக்கள் மறுக்கிறதே
போகும் வழி புரியவும் இல்லை பாதை வெகு தூரமோ தூக்கம் என்னை அணைக்கவும் இல்லை இரவின்னும் நீளுமோ
புது விடியல் தோன்றும் முன் என் வலிகள் தீருமோ
சாரல் மழை நனைக்கவும் இல்லை என் மேல் என்ன கோவமோ தென்றல் என்னை தீண்டவும் இல்லை தனிமை என்னும் கூடுமோ
இது என்ன மாயமோ என் விழியில் ஈரமோ