Indiayavin Thamarai Poovum |
---|
இந்தியாவின் தாமரைப்பூவும் நீயே இங்கிலாந்தின் ரோஜாப்பூவும் நீயே சீனாவின் திராட்சையும் நீயே ஜப்பானின் செர்ரியும் நீயே உலகத்து தேசிய மலரும் நீயே
சீனாவின் திராட்சையும் நீயே ஜப்பானின் செர்ரியும் நீயே உலகத்து தேசிய மலரும் நீயே
ஹோ இந்தியாவின் தாமரைப்பூவும் நீயே இங்கிலாந்தின் ரோஜாப்பூவும் நீயே
பட்டணத்து வீதியிலே நட்டநடு ராவினிலே மெல்ல மெல்ல நீ நடந்து போகையிலே இரவு பட்டப்பகலாகிடும் பாதையிலே கட்டணங்கள் ஒண்ணுமில்ல கட்டுப்பாடு ஏதுமில்ல ரத்தினங்கள் கொட்டுமடி சிரிக்கையிலே உள்ளம் கண்படி போகுதடி போதையிலே
எதற்காக வர்ண ஜாலம் வாயை மூடிக் கொள்ளு போதுமடா நீ வாழக் கற்றுக் கொள்ள வேணுமடா உனை நீயே எண்ணிப் பாரடா உருவாகும் எண்ணம் தானடா நிலையான வாழ்க்கை தானடா கை மேலே வந்து சேரும்டா
கனவான எண்ணம் யாவுமே நனவாகி பூக்கும் வண்ணமே உனதாகி வாசம் வீசுமே பாரடா இந்தியாவின் தாமரைப்பூவும் நீயே ஹோய் இங்கிலாந்தின் ரோஜாப்பூவும் நீயே
புத்திமதி வார்த்தைகளை சுட்டி சுட்டி நீ உரைக்க தட்டி தட்டி மறுக்குது என் வயசு உன்ன சுத்தி சுத்தி பறக்குது என் மனசு
கட்டுக் காவல் ஏதுமில்ல கட்டிப் போட யாருமில்ல துள்ளி துள்ளி தாவுதடி காதலியே உன்ன சேர்த்துக் கொள்ள ஏங்குறேன்டி வாழ்க்கையிலே
ஏனிந்த கற்பனை கோலம் கனவு கண்டது போதுமடா நீ விழித்து கொள்ளவே வேணுமடா
இளமையிலே காதல் ஏனடா எதிர்காலம் கண்கள் தானடா உளமார உழைத்துப் பாரடா வளமாகும் வாழ்க்கை தானடா சோதனை தான் வாழ்க்கை தானடா சாதனையாய் மாற்ற எண்ணுடா வேடிக்கை உலகம் உன்னையே தேடும் டா
இந்தியாவின் தாமரைப்பூவும் நீயே இங்கிலாந்தின் ரோஜாப்பூவும் நீயே சீனாவின் திராட்சையும் நீயே ஜப்பானின் செர்ரியும் நீயே உலகத்து தேசிய மலரும் நீயே
சீனாவின் திராட்சையும் நீயே ஜப்பானின் செர்ரியும் நீயே உலகத்து தேசிய மலரும் நீயே