Kaatriley Nadanthene

Kaatriley Nadanthene Song Lyrics In English


நிச ரீக ரீக ரீக ரீக ரீக நிச
சம கம மப கரி சநிநி நிச
ரீக ரீக ரீக ரீக ரீக ரிச நிச
தச தசசநி ரிக மதமதமம
மபமபதபப

காற்றிலே நடந்தேனே
காதலை அளந்தேனே
நீ தொட பறந்தேனே
நான் என்னை வியந்தேனே

அய்யோ அய்யோ மேகம் போலே
கலைந்து கலைந்து போகிறேன்
மெய்யோ பொய்யோ தோணவில்லை
ரசிகன் கவிஞன் ஆகினேன்

விண்மீன் முதுகில் ஏறினேன்
நூறு கண்டம் தாவினேன்
உன்னில் உன்னில் மூழ்கினேன்

காற்றிலே நடந்தேனே
காதலை அளந்தேனே

உயிரே உயிரே ரெண்டானதேஓ
இளமை உடைந்து திண்டாடுதேஓ
பாறை கரைந்து பாலானதே
பார்வை நான்கும் கொண்டாடுதே

வானம் எந்தன் தலை தட்டுதே
வார்த்தை என்னுள் கவி கட்டுதே
நீயும்நானும்கேட்காமல்
நாம் ஆனதே


மூச்சு காற்றிலே நுழைந்தாயே
பூச்சு பூட்டுகள் திறந்தாயே
நீ யாரடா தேடினேன் முகவரிதானே
வாய் கூசுதே உன் பேரைதான் பேசுதே

சாரலில் நான் காய்கிறேன்
உன் விழி குடைதானா
ஊமையாய் நான் தேய்கிறேன்
உன் மொழி விடைதானா

ரசித்து கவியை நாடினேன்
உன்னில் உன்னில் மூழ்கினேன்
மின்னல் முதுகில் ஏறியே
நானும் கண்டம் தாவினேன்

காற்றிலே நடந்தேனே
காதலை அளந்தேனே
நீ தொட பறந்தேனே
நான் என்னை வியந்தேனே

நிச ரீக ரீக ரீக ரீக ரீக நிச
சம கம மப கரி சநிநி நிச
ரீக ரீக ரீக ரீக ரீக ரிச நிச
தச தசசநி ரிக மதமதமம
மபமபதபப