Kalaikalin Thaaye Thunai

Kalaikalin Thaaye Thunai Song Lyrics In English


மற்றும் கே எஸ் சித்ரா

பாடலாசிரியர் : காளிதாசன்

கலைகளின் தாயே துணை வருவாயே ஆஆஆஹ்ஆஆஆஹ்ஆ தாம்தலாங்கு தக்கு தஞ்சாவூர் தவிலு தரிகிட தரிகிட பாட்டுத்தான்

தாளம் ஜதியோடு தப்பாம அடிப்பேன் தரிகிட தரிகிட போட்டுத்தான்

பாடாதே நீ டூப்பு ஓயாது என் டேப்பு தொட்டாலே குலுங்கிடும் மத்தாள புயல் நான்

தாம்தலாங்கு தாம்தலாங்கு தக்கு தஞ்சாவூர் தவிலு தரிகிட தரிகிட பாட்டுத்தான் தாளம் ஜதியோடு தப்பாம அடிப்பேன் தரிகிட தரிகிட போட்டுத்தான்

வானத்த வில்லா வளைப்பேன் மண்ணுல கயிறு திரிப்பேன் நான் பாடும் பாடல் கேட்டால் நாகப் பாம்பும் ஆடுமே

தென்னையிலே மாங்கா பறிப்பேன் ஹாங் தண்ணியில வெண்ணை எடுப்பேன் என்னிசையை கேட்டா அண்ணன் சேவல் முட்டை போடுமே

சுரங்களிலே சரங்கள் கோர்க்கும் கில்லாடி நான் சுருதியிலே கிட்டப்பா எனக்கு பின்னாடிதான் இசையெனும் கடலையும் கடைந்தவன் கடலென்ன அதை நான் கடந்தவன் எதிர்த்து பேசாதே தோல் வாயி நாலாக கிழிந்திடும்

தாம்தலாங்கு தக்கு தஞ்சாவூர் தவிலு தரிகிட தரிகிட பாட்டுத்தான் தாளம் ஜதியோடு தப்பாம அடிப்பேன் தரிகிட தரிகிட தாங்கிரிட தாங்கிரிட போட்டுத்தான்


காசில்லாமல் ஓசி வீட்டில் காலம் ஓட்டும் கருங் கொரங்கு மாசம் தோறும் வாடகை ஏத்தி மனுசன புடுங்குது ஒரு உடும்பு

காட்டு பூதம் உன்னை இனிமேல் வீட்டுக்குள்ளே நான் விடமாட்டேன் வீட்ட அடச்சா கோர்ட்டுக்கு போவேன் அதுவரை வாடகை தரமாட்டேன்

ரிகரிசரிக பதரிசரிக கதவுக்கு தாப்பா இல்லையடி பாப்பா சநிபதரிக சநிபதரிக கெணத்துல தண்ணி கெடைக்கல அண்ணி

பாபபாபநிபநி கரண்ட்டு பில்லு இன்னும் தரல இவனே நிநிநிநிபபநிநி கழுத்த புடுச்சு தள்ளு உடனே ரிகரிகப கபநிதனிச ஒரு ஜாண் இடத்திலும் ஒன்பது குடித்தனம் ரிகபகபநி பநிசரிசநி இதுக்கோ வாடகை கொடுப்பது மடத்தனம்

சநிநிசபநிகபரிகபநிச பொழப்புல கைய வச்சா ஒதப்படுவே சகரிசசநி பநிசகரி பொழுதுக்கும் எங்கிட்ட மிதிப்படுவே காக காககா ககாகரி கரிகபா டேப்ப டேப்ப டேப்ப கொடுக்கிறேன் பாபா பா

காககாக காககாக ரிகரிகபா ராக தாள பாவத்தோடு நான் இசைத்தேன் இதயங்கள் முழுதும் சுகமழை பொழிந்திடும் இசையெனும் அமுதில் உலகங்கள் மயங்கிடும்



வாணி சரஸ்வதி கல்யாணியே நீ வா வா என் பாட்டிலே அன்னை அபிராமி எந்நாளும் அருள்வாள் வெற்றிமாலை என் தோளிலே ஊர் யாவும் பாராட்ட சங்கீதம் பொழிந்திடும் சிங்கார குயில் நான்

வாணி சரஸ்வதி கல்யாணியே நீ வா வா என் பாட்டிலே அன்னை அபிராமி எந்நாளும் அருள்வாள் வெற்றிமாலை என் தோளிலே